பசியாய் வந்தவன்
கடையில் வாழைப்பழமொன்றை
காசுக்கொடுத்து வாங்கினான்.
பழம் சாப்பிட்டுப் பாவி
பாதையில் தோலைத் தூக்கி எறிந்தான்.
எடுப்பாய் துடிப்பாய்
மிடுக்காய் வந்தவனொருவன்
இளம்கன்னிகளை கோலமிட்டு
பாதை கவனம் கொள்ளலாமல்
தோல் மேல் கால்வைத்தான்.
தடாலடியாய் வழுக்கி விழுந்தான்.
தட்டித் தடவி எழ முயன்றான்
யாரும் பார்க்கக்கூடாதென்று.
தள்ளி நின்ற ‘பெரிசொன்று’
பார்த்து வரக்கூடாதா என்றது.
வலியோடு வான்பார்த்தவனை
மங்களப் பெண்ணொருத்தி
காலை உதறிக்கொளென்றாள்.
“ஐயோ பாவமென்று”
“இச்”க் கொட்டினாள் கன்னியொருத்தி.
கல்லூரி காரிகை
இளமை குறும்போடு
‘களுக்’கென்று குலுங்கினாள்
கண்ணால் ஏளன மொழியிட்டாள்
வழுக்கி விழுந்தவனை பார்த்து.
கன்னியர்களை கண்டக் கோலத்தில்
வாழைப்பழத்தோல் வழுக்கி விழுந்தவன்
வெட்கி சுற்றும்முற்றும் கவனியாது
எடுப்பும் உடுப்பும் சரிசெய்து
அனுதாபத்தை அணிந்து சென்றான்.
நசுங்கி கிடந்த வாழைப்பழத்தோல்
மனிதர்களின் அனுதாபங்கள்
‘நசுக்கியவனுக்கு’ மட்டும்தானா?
‘நசுக்கப்பட்டவனுக்கு’ கிடையாதா?
வலியுடன் முனகிக்கொண்டது.

6 கருத்துரைகள்:
''...மனிதர்களின் அனுதாபங்கள்
‘நசுக்கியவனுக்கு’ மட்டும்தானா?
‘நசுக்கப்பட்டவனுக்கு’ கிடையாதா?
வலியுடன் முனகிக்கொண்டது...''
அனுதாபங்கள்.....
ஒருவனைத் தூக்கியும் நிறுத்தும்.
வழுக்கியும் விழுத்தும்.
நல்ல ஒரு கரு எடுத்தீர்கள்.
நன்று..
வேதா. இலங்காதிலகம்.
ஒருவன் வழுக்கி ( வாழ்க்கையிலும்) விழுந்தால் ஏளனத்துடன் எள்ளி நகையாடுவோரே அதிகம். நசுக்கப் பட்ட வாழைத்தோலதன் வேலையைச் செய்து விட்டது.
@ kovaikavi
@ GMB
உங்கள் வருகைக்கும், கருத்துரைக்கும் மிக்க நன்றி
கவிதையும் ,கருத்தும் நன்று
வாழைப்பழத்தோலின் வலியை உணரமுடிந்தது.
Post a Comment