Friday, August 7, 2015

பசி

பசி
பஞ்சத்தின் மீதேறி
பவனி வந்தது



இனி எனக்கு
இங்கு இடமில்லை
என்றது அன்பு.

எனக்கும்
இதே கதிதான்
என்றது பண்பு.

இனி என்னை யார்
ஏற்றுக் கொள்வாரோ?
வேதனைக் கொண்டது வெட்கம்.

நீ தொலைந்தால்
எனக்கு நிம்மதி.
மகிழ்ச்சியானது வேட்கை.

என்னை மறந்துவிட
மனிதனுக்கு நேரம் வந்துவிட்டது
பெருமூச்சு விட்டது மானம்.

மானத்தையே மறந்துவிட்டால்
எனக்கு என்ன கதி?
தவித்தது மரியாதை.

தலைகுனிந்து குறுகி
நிலை உணர்ந்து
தள்ளாடியது ஈகை.

ஈகையே தலைகுனிந்தால்
இதயமொழி பேசப்படுமோ?
ஆதங்கப்பட்டது இரக்கம்.

இன்னும் சந்தேகமா?
கேள்வி கேட்டது
சண்டாள பொய்.

பசி வந்தால்
பத்தும் பறந்து போகும்!
மெல்ல சொன்னது உண்மை.

Print Friendly and PDFபிரிண்ட் எடுக்க

9 கருத்துரைகள்:

Anonymous said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

''...பசி வந்தால்
பத்தும் பறந்து போகும்!

மெல்ல சொன்னது உண்மை...''
மிக வித்தியாசமாகப் பத்தையும் எழுதியுள்ளீர்கள்.
சிறப்பு ..சிறப்பு.

Unknown said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

கவிதை பசியில்லாமல் இருக்கிறது

Unknown said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

மானத்தையே மறந்துவிட்டால்
எனக்கு என்ன கதி?
தவித்தது மரியாதை.

உண்மையான மாறுபட்ட கவிதை

Unknown said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

ரொம்ப நாளைக்கு பிறகு எனக்கு அனுப்புள்ளீர்.நன்றி.கவிதை நன்று

Unknown said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என கூறி பத்தையும் பிடித்து இருக்கீறிர்.சூப்பர்

G.M Balasubramaniam said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates


பசி பஞ்சத்தின் மீதேறி பவனி வந்தால்தான் பத்தும் பறந்து போகும் மற்றபடி பசி எல்லோருக்கும் வருவதே. எதுவும் பறந்து பாவதில்லை.

Unknown said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

@G.M Balasubramaniamவருகைக்கு நன்றி.பசி எல்லோருக்கும் வருவது இயற்கையே.ஆனால் பஞ்சத்தின் மீது வரும் போது பத்தும் பறந்தே போகும்.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

பத்தைப் பிடித்து பகிர்ந்ததறிந்தமைக்கு நன்றி. உங்களது இப்பதிவைக் கண்டதும் நடிகை ஷோபா நடித்த பசி திரைப்படம் நினைவிற்கு வந்தது. அதில் இவ்வாறான பல நிலைகளில் வசனம் கூறப்பட்டு, கடைசியில் காலத்திற்கோ மரணப்பசி என்ற தொடரைக் காணமுடியும்.
தமிழ் விக்கிபீடியாவில் கட்டுரைகள் எழுத ஆரம்பிப்பது தொடர்பான எனது முதல் பதிவை http://drbjambulingam.blogspot.com/2015/08/blog-post_8.html இணைப்பில் காண அழைக்கிறேன்.

”தளிர் சுரேஷ்” said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்பார்கள்! அந்த பத்தை வரிசைப்படுத்தி அழகான கவிதையாக்கி தந்தமை சிறப்பு! நன்றி!

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms