
சென்னையில் நள்ளிரவு 1 மணிக்கு மேல் புத்தாண்டு
கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட் டுள்ளது.
மது அருந்திவிட்டு வாகனங்களை ஓட்டிச்சென்றால் வாகனங்கள் உடனே பறிமுதல் செய்யப்படும் என்று போலீசார் எச்சரிக்கை
விடுத்துள்ளனர்.
சென்னை நகரில் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமலும், சந்தோஷமாக, மகிழ்ச்சி யாக புத்தாண்டு விழாவை கொண்டாடும் வகையிலும் போலீஸ்
கமிஷனர் டி.கே.ராஜேந்திரன்
கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து உத்தரவிட்டுள்ளார்.
அதுபற்றிய விவரம் வருமாறு:-
* பொழுதுபோக்கு இடங்களில் 31-ந் தேதி (இன்று) மாலை 6
மணி முதல்
நள்ளிரவு 1 மணி வரை மட்டும் புத்தாண்டு
கொண்டாட்டங்களுக்கு அனுமதிக்கப்படும். நள்ளிரவு 1 மணியுடன்
நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் கேளிக்கை விடுதிகளில் மதுபான விற்பனை மற்றும் உணவு விற்பனையை நிறுத்திக்கொண்டு கொண்டாட்டங்களையும் கண்டிப்பாக...