திருக்குறள்
திருவிழா
திருக்குறளை
போற்றும் வகையில் நாளை (வியாழக்கிழமை-17.12.2015) டெல்லி
பாராளுமன்ற வளாகத்தில்
காலை 8.30 மணியளவில் ‘திருக்குறள் திருவிழா’ நடைபெற உள்ளது. இந்த விழாவில், மத்திய மந்திரிகள் வெங்கையா நாயுடு, ஸ்மிரிதி இராணி ஆகியோர் கலந்துகொள்ள உள்ளனர்.
விழாவில்,
‘திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி’
நடைபெற இருக்கிறது. இதில் பங்கேற்பதற்காக
தமிழகத்தில் இருந்து 133 மாணவ-மாணவிகள்
டெல்லி செல்கின்றனர்.
நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தருண் விஜய் எம்.பி. செய்து வருகிறார்.
இந்த
விழாவில் திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் வைரமுத்துக்கு, ‘வள்ளுவர் வாழ்நாள் சாதனையாளர் விருது’ வழங்கப்பட உள்ளது. கல்வியாளர் வா.செ.குழந்தைசாமி, குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், எழுத்தாளர் ஜே.டி.குரூஸ், ‘தினமணி’ ஆசிரியர்
கே.வைத்தியநாதன் ஆகிய 4 பேருக்கும்
‘வள்ளுவர் சிறப்பு விருது’ வழங்கப்பட இருக்கிறது.
இதில்
அனைத்து கட்சி தலைவர்கள், பாராளுமன்ற
உறுப்பினர்கள், மத்திய மந்திரிகள் உள்பட
முக்கிய பிரமுகர்கள் ஏராளமானோர் கலந்து கொள்கின்றனர்.
பாராளுமன்ற வளாகத்துக்குள் நடைபெறும்
‘திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி’யில்
தமிழகத்தை சேர்ந்த 133 மாணவ-மாணவிகள் திருக்குறள் ஓதுகிறார்கள்.
போட்டியில் பங்கேற்கும் அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் சான்றிதழ் வழங்கப்பட உள்ளன.
திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் பங்கேற்கும் மாணவ-மாணவிகள் ஜனாதிபதி
மாளிகைக்கு சென்று, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியுடன்
புகைப்படம் எடுத்துக்கொள்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

2 கருத்துரைகள்:
மிக நல்ல தகவல்
வேதாவின் வலை
நல்ல முயற்சி. பாராட்டுகள். பகிர்வுக்கு நன்றி.
Post a Comment