Wednesday, December 23, 2015

படித்ததில் சிரித்தது-வலித்தது-ரசித்தது

ஹலோ... பிபிசிஈ  பேங்கா?’’

‘‘ஆமாங்க!’’
‘‘நான் சின்ராசு பேசறேங்க...’’
‘‘சொல்லுங்க?’’
‘‘நான் வண்டிக்கு இந்த மாசம் டியூ கட்டலைங்க!’’
‘‘பரவாயில்லைங்க... மழை, வெள்ளம் வந்ததால ஃபைன் எல்லாம் போட மாட்டோம். அடுத்த மாசம் சேர்த்துக் கட்டலாம்னு எஸ்.எம்.எஸ். வந்திருக்குமே?’’
‘‘வந்ததாலதான் கூப்பிட்டேன். அடுத்த மாசமும் கட்டலைன்னா என்ன செய்வீங்க?’’
‘‘வண்டியை வந்து நாங்களே எடுத்துக்குவோம்!’’
‘‘அதை இப்பவே வந்து செய்ய முடியுமா... பத்தடி தண்ணிக்குள்ள நிக்குது!’’
டொக்!
(சென்னை மழை வெள்ளத்துக்கு பிறகு)
>>>>>>>படித்ததில் சிரித்தது
------------------------------------------------------------------------------------------------------------

"டாஸ்மார்க்"பார்ல ஒரு சின்னப்பையன் வேல பாத்துகிட்டு இருந்தான்.ஒரு குடிகாரன் அவனைக் கூப்பிட்டு சொன்னான்


"நீயெல்லாம் இங்க வராத. நீயும் என்னைப்போல
பெரிய குடிகாரன் ஆயிடுவ."

அதுக்கு அவன் சொன்னான்,
"நீயும் இனிமே இங்க குடிக்க வராத, நாளைக்கு உன் பையனும் என்னைப்போல அப்பாவ இழந்து,இங்க வேலைக்கு வந்தாலும் வருவான்...!

>>>>>>>படித்ததில் வலித்தது.
----------------------------------------------------------------------------------------------------------------------------------
பெரிய குரு இருந்தார்.முற்றும் துறந்தவர்.எல்லாம் கற்றவர்.அவரை ஒரு பிரசங்கம் செய்ய கூப்பிட்டிருந்தாங்க.

பத்தாயிரம் பேர் வருவாங்கனு சொல்லியிருந்தாங்க.அவரை அழைச்சிட்டு வர ஒரு குதிரைக் காரன் போயிருந்தான். அன்னிக்குன்னு பார்த்து ஊரில் பயங்கர மழை. கூட்டம் கேன்சலாகி எல்லோரும் கலைஞ்சு போயிட்டாங்க.

குரு வந்தபோது அங்கே யாருமே இல்லை.


பேசறதுக்காக நிறையத் தயார் பண்ணிட்டு வந்த குருவுக்கோ ஏமாற்றம்.இருக்கிற ஒரு குதிரைக்காரனுக்காக மட்டும் பிரசங்கம் பண்ணவும் மனசில்லை.என்னப்பா பண்ண லாம்?’ னு கேட்டார்.

அய்யா! நான் குதிரைக் காரன் ,எனக்கு ஒண்ணும் தெரியாதுங்க ஆனா ஒண்ணே ஒண்ணு தெரியுங்க.நான் முப்பது குதிரை வளர்க்கிறேன். புல்லு வைக்கப் போறப்போ எல்லாக் குதிரையும் வெளியே போயி, அங்கே ஒரே ஒரு குதிரை மட்டும்தான் இருக்குதுனு வெச்சுக்கோங்க , நான் அந்த ஒரு குதிரைக்குத் தேவையான புல்லை வெச்சிட்டுத்தாங்க திரும்புவேன்னான்.

பொளேர்னு அறைஞ்ச மாதிரி இருந்தது குருவுக்கு.

அந்தக் குதிரைக்காரனுக்கு ஒரு சபாஷ்போட்டுட்டு, அவனுக்கு மட்டும் தன் பிரசங்கத்தை ஆரம்பிச்சார். தத்துவம், மந்திரம், பாவம், புண்ணியம்,சொர்க்கம்,நரகம்னு சரமாரியா போட்டுத் தாக்கி பிரமாதப் படுத்திட்டார் குரு.

பிரசங்கம் முடிஞ்சுது.

 ‘எப்படிப்பா இருந்தது என் பேச்சு?’னு அவனைப் பார்த்து பெருமையா கேட்டார் குரு.

 ‘அய்யாநான் குதிரைக்காரன்.எனக்கு ஒண்ணும் தெரியாதுங்க.
ஆனா ஒண்ணே ஒண்ணு தெரியுங்கநான் புல்லு வைக்கப் போற இடத்தில் ஒரு குதிரைதான் இருந்துச்சுன்னா, நான் அதுக்கு மட்டும்தான் புல்லு வெப்பேன்.முப்பது குதிரைக்கான புல்லையும் அந்த ஒரு குதிரைக்கே கொட்டிட்டு வர மாட்டேன்!னான் .

அவ்ளோதான்

குரு தெறிச்சிட்டார்!

>>>>>>>படித்ததில் ரசித்தது...


Print Friendly and PDF

0 கருத்துரைகள்:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms