தொடக்கம்
வழி வழியாய் மனிதனின் எண்ணங்களும் செயல்களும் மாற்றத்தை
நோக்கியே சென்றுக் கொண்டிருக்கும்.அவை கடந்து வந்த பாதையினையும் அனுபவங்களையும்
ஏற்றுக் கொண்டு புது வாழ்க்கையை தொடங்கும் .நமக்கு கடந்த காலத்தில் அனுபவித்த இயற்கை பேரிடர்கள்(மழை,புயல் மற்றும் பூகம்பம்)
மூலம் மானுடம் கொண்ட மனித நேயம் நம் வாழ்வில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும்.
இவைகளை கடந்து நாம் கொள்ள வேண்டிய காரணிகள் நம்மை மேலும் வழி நடத்தும் அவை : -
எதிலும் நேர்மறை எண்ணங்களை விதைத்து கொள்ளுவோம்
நடப்பவை எல்லாம் நன்மைக்கே எனும் நேர்மறை எண்ணங்களை விதைத்திடுவோம்
வெற்றியினை கொண்டாடும் நாம் தோல்வியை எதிர்கொள்ள தயங்கக்கூடாது.பல தோல்விகள்
நமக்கு பாடம் கற்றுக்கொடுக்கும் ஆசான்கள் .அவையே நம்மை வெற்றிக்கான வழியை
கற்றுக்கொடுக்கும்
காலை
பொழுது கவலையற்றப் பொழுது
காலைப்பொழுது சூரியனை பார்க்க கற்றுக் கொள்ளும் பழக்கம்
நம்மை சுறுசுறுப்பாக்கும். இரவினில் செய்த திட்டமிட்ட வேலைகளை விரைவாய் செய்ய காலை
பொழுதை நம் உடலை தயார் செய்ய தயாராவோம்.
நம்மை நாமே உற்சாகப்படுத்திக்கொள்ளுவோம்
நம் சக்தியினை கடந்த கால நினைவுகளுக்கும், பிடிக்காத விஷயங்களுக்கும், புறம்பேசுவதற்கும், எதிர்மறை
எண்ணங்களுக்கும் வீணடிக்க வேண்டாம். எதிலும், ஒரு நன்மையைத் தேடிக்
கண்டுபிடித்து, நம்மை நாமே உற்சாகப்படுத்திக்கொள்ளுவோம்
மாற்றம்
புதிது
புதிது என்றாலே உற்சாகம்தான். புது உடை, புது
உறவுகள், என புதிது கிடைத்தாலே மனம்
உற்சாகம் அடைகிறது.எனவே புதிது,உற்சாகம்,நம்பிக்கை என்ற அடிப்படையில் எப்போதும்
விழாக்கள், பண்டிகைகள், கொண்டாட்டங்கள் மனித இனத்திற்கும் மனதிற்கும்
அவசியமாகிறது. அதனை ஆரோக்கியமான
மாற்றங்களைக் கொண்டு வருவோம். அம்மாற்றங்களைக் சின்ன சின்னதாய் செய்து இயற்கையோடு கொஞ்சம் இணைந்து உலகையும்
காப்போம்.
மனிதர்களை வளர்ப்போம்
நாம் சந்திக்கும் மனிதர்கள் அனைவரும் நமக்கு ஏதாவது
ஒன்றை கற்றுக் கொடுப்பார்கள்.அவற்றின் மூலம் நாம் மனிதர்களை வளர்ப்போம். மன்னிப்பு(Sorry),நன்றி(Thanks),வணக்கம்(Good Morning/Evening) என்னும் மந்திர வார்த்தைகளை பயன்படுத்துவோம். 'சின்ன தப்புத்தானே' என்றோ 'சின்ன உதவிதானே' என்றோ ‘சின்னவர் தானே’ என்றோ அலட்சியம் வேண்டாம். கொஞ்சம் பெருந்தன்மையாக
இருப்பது, நிறைய விஷயங்களை சாதிக்கும்.
எளிமையாய் இருப்போம்
எளிமை நம்மை சுற்றி ஓரு நட்பு வட்டத்தை உருவாக்கும். அன்பாய்
அணுக உரிமையாய் மற்றவரிடம் நாம் பழக எளிமை ஒரு மந்திர வசீகரணமாகும்.
நேரத்தைப் பகிர்ந்துக் கொள்வோம்
பிடித்தவர், உறவினர், நண்பர்கள் என நம் விருப்பப் பட்டியலில் இருப்பவர்களுக்கு
நம் நேரமே அவர்களுக்குப் பரிசாக அமையட்டும். பொருட்களைப் பரிசளிப்பதைவிட, நம் நேரத்தைப் பரிசளிப்பது அவர்களுடன் நம் உறவைப் பலப்படுத்தும்.
வாழ்க்கையை உற்சாகமாக துவங்குவோம்.வெற்றிப் பெறுவோம்

4 கருத்துரைகள்:
வாழ்க்கையை உற்சாகமாகத் தொடங்கும் நல்ல பதிவு.
இனிய ஆண்டு தொடரட்டம்.
வாழ்க்கையை உற்சாகமாக துவங்குவோம்.வெற்றிப் பெறுவோம்
Ellorum inbutru irukka veru ondrum ariyen paraaparame
Ellorum inbutru irukka veru ondrum ariyen paraaparame
Post a Comment