இது உச்சமல்ல!
உன் வியர்வையை
தாய் முந்தானை
துடைக்கும்.
பயத்தை தந்தை கை
பக்கத்தில் வராமல்
ஒடுக்கும்.
பாடங்களை பதிய வைத்த
ஆசிரியனின் ஆசிகள்
உன்னை அக்கரை சேர்க்கும்.
வெற்றி மட்டுமே
வேண்டும் என்ற முனைப்போடு
செயல்படு.
வாழ்த்துக்களும் ஆசியும்
உனக்கு உண்டு
தளராமல் எழுது ஞாபகத்தோடு.
வாசலில் வந்து நிற்கும்
எதிர்கால வசந்தம்
புன்னைகையோடு.
இது உச்சமல்ல
இதுவொரு பதிவேடு
பதிவுகள் உன்னால் உனக்காக நிரப்பப்படுகிறது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று (04.03.2016) தொடங்கும் பிளஸ் டூ தேர்வை எழுதும் அனைத்து மாணவ-மாணவியர்களுக்கு வாழ்த்துக்கள்
Read Arrow Sankar's Blog

1 கருத்துரைகள்:
இது உச்சமல்ல
இதுவொரு பதிவேடு
பதிவுகள் உன்னால் உனக்காக நிரப்பப்படுகிறது. nanru...
https://kovaikkavi.wordpress.com/
Post a Comment