“ஒரு ஊர்ல ஒரு பெரும் பணக்காரன் இருந்தான். தன்கிட்ட இருக்கற ஏராளமான பணத்தை செலவு பண்ணாம, சேர்த்துகிட்டே இருந்தான். தங்கக்காசுகளா மாத்தி, சின்னச் சின்ன ஜாடில போட்டு அங்கங்க பதுக்கி வெச்சுப்பான். ஒரு தடவை அப்படி அவன் வெச்சிருந்த ஜாடி ஒண்ணு காணாமப் போச்சு. அதுல 50 தங்கக்காசுகள் இருந்தன.
இவன் அக்கம்பக்கம், வேலையாட்கள்னு எல்லார்கிட்டயும் கேட்டான். கிடைக்கல.
சிலநாட்கள் கழிச்சு, அந்தப் பணக்காரனுக்கு பக்கத்து தோட்டத்துல இருந்த ஒரு ஏழை விவசாயி வீட்ல இருக்கற பாப்பாவுக்கு ஒரு ஜாடி கெடைச்சது. அத அந்தப் பாப்பா அப்பாகிட்ட காமிச்சப்போ, “ஐயையோ இது அவரோடதாச்சே”ன்னு கொண்டுபோய் உடனே கொடுத்தாரு.
அந்தப் பணக்காரர் “அப்பாடா”ன்னு மனசளவுல நெனைச்சாலும், அதுல இருக்கற காசுகள் எண்ணிக்கை சரியா இருக்குமானு சந்தேகம். எண்ணினார். 50
இருந்தது. ஆனாலும் எண்ணிட்டு இருக்கும்போதே அவர் மனசுல பேராசை பிடிக்க ஆரம்பிச்சது. எண்ணி முடிச்சதும், “ஐயோ இதுல 75 தங்கக்காசுகள் இருந்தது. ஆனா இப்ப 50தான் இருக்கு. இவன் எடுத்துட்டான்”னு சொல்லி அந்த ஏழை விவசாயியையும், அந்தப் பாப்பாவையும் மன்னர் முன்னாடி நிறுத்தினார். “75
தங்கக்காசு வெச்சிருந்தேன். இப்ப இந்த ஜாடில 50தான் இருக்கு” - இதான் பிராது!
மன்னர் கொஞ்சநேர விசாரணையிலேயே, ‘இவன் பேராசைக் காரன்.. பொய் சொல்றான்’னு கண்டுபிடிச்சுட்டார். உடனே இப்படித் தீர்ப்பு சொன்னாராம்.
”அவர் தொலைச்ச ஜாடில 75
தங்கக்காசுகள் இருந்ததா உறுதியாச் சொல்றார். ஆனா இப்ப கிடைச்சிருக்கற ஜாடில 50தான் இருக்கு. ஆக இது அவர் தொலைச்ச ஜாடி அல்ல. அதுனால அந்த 75 இருக்கற ஜாடி கிடைக்கறவங்க என்கிட்ட வந்து கொடுக்கலாம். 50 தங்கக்காசு தொலைச்சதா யாரும் புகார் தராததால, இந்த 50 தங்கக்காசு இருக்கற ஜாடியை, இந்த விவசாயியின் நேர்மையைப் பாராட்டி அவருக்கே கொடுக்கறேன்”னு சொல்லிக் கொடுத்துட்டாராம்.

1 கருத்துரைகள்:
அருமையான தீர்ப்பு
Post a Comment