Sunday, November 17, 2013

இதய நோயில் இருந்து தற்காத்துக் கொள்ள 3 வழிகள்


இதய நோய்.. அவசர உலகில் மோசமான உணவு பழக்க வழக்கம் மற்றும் உடல் உழைப்பின்மை காரணமாக பலருக்கும் ஏற்படும் நோய்களில் ஒன்றாக இதய நோய் உள்ளது.
உடல் உழைப்பின்மையும், நொறுக்குத் தீணி பழக்கமும், உடல் பருமனை ஏற்படுத்துகிறது. இதன் மூலமாக இதய நோய் ஏற்படும் வாய்ப்பும் அதிகரிக்கிறது.
இதனை தவிர்க்க மூன்று வழிகளை பின்பற்ற வேண்டும்.
அதாவது, ஆரோக்கியமான உணவு... ஆலிவ் ஆயில், தானியங்கள், காய்கறிகள், கடல் உணவுகள் போன்றவற்றை ஆரோக்கியமாக தயாரித்து சுகாதாரமான முறையில் உண்ண வேண்டும். இன்னமும், க்ரிக் நாடுகளில் தங்களது பழமையான உணவுப் பழக்கத்தைக் கையாறும் மக்களுக்கு இதய நோய் ஏற்படுவதில்லை என்று ஆய்வுகள் சான்றளிக்கின்றன.
சிகரெட் பிடிக்காதீர்
இதயநோய்களை ஏற்படுத்தும் காரணிகளில் சிகரெட் பிடிப்பது முக்கியமான விஷயமாக உள்ளது.  இந்த காரணத்தால், அமெரிக்காவில் தற்போது புகைப்போரின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது. ஆனால், மோசமான செய்தி என்னவென்றால், மக்கள் தொகை அதிகமாக இருக்கும் இந்தியா, சீனாவில் புகைப்போரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. புகைப்பதால் நுரையீரல் புற்றுநோய் மட்டுமே ஏற்படும் என்று எண்ணி வந்துள்ளோம். ஆனால், புகைப்பதால் இதய நோய் ஏற்படும் என்ற விழிப்புணர்வு குறைவாகவே உள்ளது.
நடையை ஓரம்கட்டாதீர்
பலருக்கும் இப்போது நடப்பதற்கான வாய்ப்பே குறைவாக உள்ளது. எங்கு செல்வதென்றாலும் வாகனத்திலும், ஆட்டோவிலும் செல்கிறோம். முன்பெல்லாம் வசதி இல்லாததால் அதிகம் நடந்தார்கள். அதனால் அவர்கள் ஆரோக்கியமாகவும் வாழ்ந்தார்கள். இதய நோய் ஏற்பட்டு மருத்துவமனைக்கு நடையாய் நடக்க வேண்டாம் என்று விரும்பினால், இப்போதே ஆரோக்கியமாக நடைபயணம் மேற்கொள்வோம்.

0 கருத்துரைகள்:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms