ரூ.14,600 கோடி
மதிப்பீட்டில் செயல்படுத்தப்படவுள்ள சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல்
வழித்தடம் வண்ணாரப்பேட்டையிலிருந்து சென்னை சர்வதேச விமான நிலையம் வரை 23 கிலோமீட்டர் தூரம்.
இரண்டாம் வழித்தடம் சென்ட்ரல் முதல் புனித தோமையார் மலை
(செயின்ட்தாமஸ் மவுன்ட்) வரை 21.9 கிலோ மீட்டர் தூரம்.
மெட்ரோ ரயில் திட்டத்தில் மொத்தம் 42 ரயில்கள் இயக்கப்படும். முதற்கட்டமாக
நான்கு பெட்டிகள் கொண்ட 9 ரயில்
பெட்டி தொடர் பிரேசில் நாட்டிலும், மீதமுள்ளவை
ஆந்திர மாநிலம் தடாவிலுள்ள பிரேஸில் நிறுவன தொழிற்சாலையில் தயாரிக்கப்படுகிறது.
இந்நிலையில் பிரேஸிலில் தயாரான ஒரு ரயில் பெட்டிதொடர் நேற்று (06.11.2013) சென்னையில் முதலமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில் 800 மீட்டர் தூரம் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.
இந்நிலையில் பிரேஸிலில் தயாரான ஒரு ரயில் பெட்டிதொடர் நேற்று (06.11.2013) சென்னையில் முதலமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில் 800 மீட்டர் தூரம் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.
பல்வேறு பாதுகாப்பு வசதிகள் கொண்டுள்ள இந்த ரயிலின்
சிறப்பம்சங்கள்:
1) அனைத்து பெட்டிகளும் குளிர்சாதன வசதி செய்யப்பட்டவை.
1) அனைத்து பெட்டிகளும் குளிர்சாதன வசதி செய்யப்பட்டவை.
2) ஒவ்வொரு பெட்டியிலும் நான்கு ரகசிய கேமராக்கள் பொருத்தப்பட்டு, ஓட்டுனர் அறையில் ஒளிபரப்பாகும்.
3) ரயில் பெட்டியின் வெளிப்புறமும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கும்.
4) பயணிகள் உட்காரும் இடங்களின் அருகே ஸ்பீக்கர் பொருத்தப்பட்டிருக்கும்.
5) ஒவ்வொரு ரயில் நிறுத்தத்திலும் நிலையத்தின் பெயர் அறிவிக்கப்படும்.
6) நிலையத்தின் பெயர் திரையிலும் ஆங்கிலம் மற்றும் தமிழில் தெரிவிக்கப்படும்.
7)அவசர அழைப்புகளுக்கு பயணிகள் பகுதியில் பிரத்யேக தொலைபேசி பொருத்தப்பட்டிருக்கும்.
8) பெண்கள் மற்றும் முதல்வகுப்பு பெட்டிகள் ஓட்டுனர் இருக்கைக்கு அருகே இருக்கும்.
9) மாற்றுத் திறனாளிகள், குழந்தைகளுக்கு தனி வசதி உண்டு.
![]() |
வெளிப்புற தோற்றம் |
3 கருத்துரைகள்:
மெட்ரோ ரயில் சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கட்டும். நன்றி
கணினி கோளாறு என்பதால் எந்த தளத்திற்கும் வரமுடியவில்லை... (இந்தக் கருத்துரை நண்பரின் மடிக்கணினியிலிருந்து)
தொடர வாழ்த்துக்கள்...
விபரம் அறிந்தேன் .நன்றி
Post a Comment