Wednesday, December 31, 2014

ஆறாவது அறிவு

மிருகத்துக்கு ஐந்தே அறிவு ,எனக்கு ஆறு அறிவாக்கும் என்று மனிதன் அடிக்கடி பெருமையடித்துக் கொள்வதை சிங்கத்தால் சகிக்க முடியவில்லை .
ஒரு நாள் அது கடவுளிடம் சென்று கடவுளே கடவுளே! எங்களுக்கு ஐந்தறிவைக் கொடுத்துவிட்டு மனிதனுக்கு மட்டும் ஆறறிவைக் கொடுத்திருக்கிறீர்களே, இது நியாயமா? என்று கேட்டது.



கடவுள் திடுக்கிட்டு,அவனுக்கு நான் எங்கே ஆறறிவைக் கொடுத்தேன்? என்றார்.

எங்களுக்கில்லாத பகுத்தறிவை நீங்கள் அவனுக்குக் கொடுக்க வில்லையா? அதைத்தான் அவன் ஆறாவது அறிவு என்கிறான்! என்றது சிங்கம்.

நாசமாய்ப் போச்சு, அவனுக்கு நான் கொடுத்த சாபமல்லவா அது?

சாபமா!

சந்தேகமென்ன? எதையும் அறிய முயல்வதும்,அறிந்தாலும் அதை உணர முடியாமல் இருப்பதும், உணர்ந்தாலும் அதன்படி நடக்க முடியாமல் தவிப்பதும் நான் அவனுக்குக் கொடுத்த சாபம்தான்! என்றார்.

அந்த சாபத்தையா அவன் பகுத்தறிவு என்கிறான்? ஐயோ வேண்டாம்! அது எங்களுக்கு வேண்டவே வேண்டாம்! என்று ஓட்டம் பிடித்தது சிங்கம்.

விசேச நாட்கள் பண்டிகை நாட்கள் விழா நாட்கள் மனிதனை மனித உறவுகளை புதுப்பித்துக்கொள்ள உண்டானதை மறந்து பஞ்சமகா பாவங்களான கள்,காமம்,கொலை,களவு,பொய், இவைகளைத் தேடி அலையாமல் நல்லதை அறியவும்,அறிந்தாலும் அதை உணர்ந்தும் உணர்ந்தாலும் அதன்படி நடக்க முயன்றும்  மனித நேயத்தினை வளர்த்தும்  
புது வருட முதல் நாளை கொண்டாடுவோம் வாருங்கள்
அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் .

கதை : விந்தனின் குட்டிக் கதைகள் புத்தகத்திலிருந்து 

என் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
Print Friendly and PDF

3 கருத்துரைகள்:

ப.கந்தசாமி said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

அருமையான நீதிக்கதை. இதை படித்தால் மட்டும் போதாது. சிந்திக்கவும் வேண்டும்.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

நல்ல கதை. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

Venkat Narayanan AR said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

அருமை! இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms