
Wednesday, February 04, 2015

Unknown
நான் நாவல்களை படித்து கிட்டத்தட்ட சுமார் 30 வருடங்கள் ஆகின்றன.சிறுவயதில் பள்ளிக்கூட புத்தகம்
ஆரம்பித்து பத்தாம் வகுப்பு வரை துணைப் பாடல்நூலில் வரும் கதைகளையே அதுநாள்
மட்டும் படித்து அறிந்தேன் பின் எழுத்தாளர்கள் சுஜாதா,
புஷ்பாதங்கத்துரை,ராஜேஷ்குமார்,ராஜேந்திரகுமார் ஆகியோரின் கதைகள் என சில வருடங்கள் படித்தேன்.
அதன் பின்னே கதைகள்
நாவல்கள் படிக்க அதிக நாட்டமும் நேரமும் இல்லை. தவிர்த்தே வந்தேன்.கிட்டத்தட்ட 25 வருடங்களுக்குப்பின் நான்
வலைப்பூவை ஆரம்பித்தப் பின் ஒருப்பக்க கதைகளையும், ஆன்மீக,அறிவார்ந்த,தத்துவ கதைகளை
படிக்க ஆரம்பித்தேன். அதுவும் மஹாபாரதம் முழுமையாக படித்தபின்(ஒரு வருடமாக) அந்த ஆர்வம் அதிகமானது. மஹாபாரதத்தில் வரும்
துணைக் கதைகளை சிலர் சமூகக் கதைகளாக மாற்றி எழுதி இருந்ததை அறிந்தேன்.
அதனை
பாக்யா,ஆனந்த் விகடன்,குமுதம்,கல்கி என பல இதழ்களில் நானே கண்க்கூடாக
படித்தேன்.ஆனால் அப்படி அவர்கள் மாற்றி சில சமூகக் கண்ணோட்டத்துடன் மாற்றி இன்றைய
காலக் கட்டத்திற்கு ஏற்றார்போல் எழுதியதை சில நேரங்களில் கண்டனத்திற்கு உள்ளாகி
உள்ளனர்.(உ-ம் : சிவசங்கரியின் வாடகைத்தாய் கதைப் பற்றிய “அவன் அவள் அது” கதை.இது சினிமாவாகவும் வந்துள்ளது).

ஆனால் ஜாதி,இனம்,மதம்,மொழி நாடு சார்ந்த கதைகளை கையாளும்போது எழுத்தாளர்கள்
கவனமாக இருக்க வேண்டும். 1980களிலும் அதற்கு முந்தைய காலக்கட்டங்களிலும் கதை,
கவிதை,கட்டுரை,எழுத்துக்கள் ஒரு வட்டாரத்தில் மட்டுமே பரவியுள்ள அந்த
மொழிக்கேற்பவும், அதன் ஆசிரியரின் பரிச்சயத்திற்கும் ஏற்ப கண்டனத்திருக்கும், விமர்சனங்களுக்கும்
விவாதங்களுக்கும் ஆட்ப்படும். ஆனால் இன்றைக்கு வலைதளம் எனும் மிக பெரிய விஞ்ஞான
வளர்ச்சியில் உலகத்தின் எல்லை சுருக்கப்பட்டு எல்லாரும் எல்லாமும் அறிய முடிகிறது.அதனால்
கண்டனம்,விமர்சனம்,விவாதம் உடனே நடைபெறுகிறது. (உ-ம்
:சினிமாவில் துப்பாக்கி,விஸ்வரூபம்,கத்தி என பட்டியல் நீளும் ) இதற்கு காரணம் ஊடக
வளர்ச்சியில் வலைதளத்தின் பங்கின் எதிரொலி. இது நல்லதா கெட்டதா என்ற விவாதம்
இப்போது தேவையற்றது.
ஆனால் திரு பெருமாள் முருகன் எழுதிய மாதொருபாகன் (ONE PART WOMAN 2013 -மாதொருபாகன் நாவலின் ஆங்கில
மொழிபெயர்ப்பு : அனிருத்தன்
வாசுதேவன்) பதிப்பு வெளியானது 2010-ம்௦ வருடம். அப்போதைய
காலக்கட்டத்தில் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் இன்றைக்கு எதிர்ப்பு
தெரிவிப்பதும் அதைத்தொடர்ந்து அங்கொன்றும் இங்கொன்றுமாக இன்னும்
விமர்சனம் நடந்துக் கொண்டிருப்பதும்மே இந்த கட்டுரையை நான் எழுத வேண்டியதானது. இனி எந்த நாவலையும்,கட்டுரையும், சிறுகதைகளையும்,கவிதைகளையும் எழுதுவதில்லை
எனவும், இனி மாதொருபாகன் மற்றும் அவர் எழுதிய எந்த
நாவலையும் வெளியிடவேண்டாம் என்றும், விற்காமல் உள்ள நாவல்களைப்
பதிப்பகத்தார் தன்னிடம் கொடுத்தால் உரிய தொகையைக் கொடுத்துவிடுவதாகவும், பெருமாள்முருகன் என்பவன்
இறந்துவிட்டதாகவும், தமிழ் ஆசிரியரான பெ. முருகன்
மட்டும் இருப்பதாகவும் முகநூலில் தெரிவித்துள்ள
பிறகும் நடந்துக் கொண்டிருக்கிறது.(இதனால் நான் “மாதொருபாகன்” நாவலை முழுவதையும் படித்தேன்)

இதன் தாக்கம் என்னவென்றால் இனி ஒவ்வொரு
எழுத்தாளனும் ஜாதி,இனம்,மதம்,மொழி நாடு சார்ந்த கதைகளையோ,
கட்டுரைகளை எழுதும்போது அதன் வீரியமும், கருத்துக்கும், உணர்வுக்கும் உட்பட்டே எழுத
வேண்டும். இல்லையெனில் நம்மை நாமே சிதைத்துக்கொள்ளும் மனநோய்க்கு ஆளாவோம்.
இது எந்த
எழுத்து சுதந்திரத்தையும் என்றும் பறிக்காது.
5 கருத்துரைகள்:
கற்பனையோ ,நிஜமோ அதனை வெளிக்கொணர்வது ஒரு எழுத்தாளனின் எழுத்தாக்கம் ,அதே சமயத்தில் யாரையும் புண்படுத்தக் கூடாது.
''..இனி ஒவ்வொரு எழுத்தாளனும் ஜாதி,இனம்,மதம்,மொழி நாடு சார்ந்த கதைகளையோ, கட்டுரைகளை எழுதும்போது அதன் வீரியமும், கருத்துக்கும், உணர்வுக்கும் உட்பட்டே எழுத வேண்டும். இல்லையெனில் நம்மை நாமே சிதைத்துக்கொள்ளும் மனநோய்க்கு ஆளாவோம். இது எந்த எழுத்து சுதந்திரத்தையும் என்றும் பறிக்காது.....''
தகவல் புரிந்து கொண்டேன்.
மிக்க நன்றி.
பணி தொடர இனிய வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
இதையே என் பதிவுக்கு பின்னூட்டமாக எழுதி இருந்தீர்கள். அதற்கான மறுமொழியை அங்கேபதிவிட்டிருக்கிறேன். நன்றி.
@G.M.Balasubramaniam
உங்கள் வருகைக்கு நன்றி. உங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றி.ஆனால் நீங்கள் சொல்லியது போல் எனது கருத்தும் கதை அல்லது நிகழ்வுகள் பற்றி எழுதும் களத்தில் எழுத்தாளனின் எல்லை என்பது மனித உணர்வுகளை மதிப்பதுத்தான்.அது மூடநம்பிக்கையோ முட நம்பிக்கையோ. நம்பிக்கை என்பது மனித வலையில் தினம் தினம் மாறுபடும்.அதற்க்கான எல்லையை ஒவ்வொரு தலைமுறையும் மாற்றி கொண்டே வரும்.
இதன் தாக்கம் என்னவென்றால் இனி ஒவ்வொரு எழுத்தாளனும் ஜாதி,இனம்,மதம்,மொழி நாடு சார்ந்த கதைகளையோ, கட்டுரைகளை எழுதும்போது அதன் வீரியமும், கருத்துக்கும், உணர்வுக்கும் உட்பட்டே எழுத வேண்டும் என்ற கருத்து ஏற்புடையதாகத் தெரியவில்லை. உள்ளதை உள்ளதுபோல் எழுதவேண்டிய நிலை இருக்கும்போது அதனை மறைக்கவோ, மறுக்கவோ, மாற்றவோ முடியாது. இருப்பினும் ஏதாவது ஒரு நிலையில் வரையறை வைத்துக்கொள்வது நல்லது.
Post a Comment