உலகத்தின் அன்னை கருணையே வடிவானவள். லலிதா சகஸ்ரநாமம் அன்னையை
இருமுறை மாத்ரே நம: எனத் துதிக்கின்றது. இது கூறியது
கூறல் அன்று. முதலில் பொதுவாகத் துதித்தது. இரண்டாவதாகக் கூறியது, எவ்வுயிர்க்கும் எப்பிறப்பிலும் அவளே
அன்னை என்றதால் துதித்தது.
அன்பும் கருணையும் மிக்க அன்னை அழகும் இளமையும் ததும்பும் காமாட்சி, இராஜராஜேசுவரி, மீனாட்சி முதலிய வடிவில் உயிர்களுக்கு
அருள் செய்கின்றாள். வீரம்,சக்தி வடிவத்தை ஜ்வாலாமுகி, சண்டி முதலிய கோரவடிவில் உயிர்களுக்கு
வரும் நலிவுகளை ஒழிக்கின்றாள். பிரபஞ்சத்தைப் புரட்டிப் போட்டுப் புதிதாகப்
படைக்கும் அவளுடைய அவதாரம், காளி என்ற வடிவில் புறத்தே கோரமாயினும் அகத்தே கருணையும் அன்பும்
நிறைந்ததாகும்.
அன்னையின் ஆயிரம் திருநாமங்களில் ஒன்று “பண்டாஸூர வதோத்யுக்த சக்திசேனா
ஸமன்விதா” (65) என்பதாம். இதற்குப்
பண்டாசுரனை சம்ஹாரம் செய்ய அதிவிதமானசக்தியுடன் கூடியிருப்பவள் என்பது பொருள்.
அவ்விதமான பெருமை மிக்க அன்னையை பக்தியுடன் துதிக்கவும்
ஆராதிக்கவும் உடனே காட்சி தருபவள் என்பதை எனது நண்பர் திரு கார்த்திகேயன் மனைவி
திருமதி ராணிஸ்ரீ மூலமாக காட்சியருளியதே இந்த பதிவு
2015, ஜூன் 28-ந் தேதி என்னிடம் நண்பர் திரு கார்த்திகேயன் (திரு கஜேந்திர பாபு
அவர்கள் மூலமாக அறிமுகமானவர்) மற்றும் அவரது மனைவி திருமதி ராணிஸ்ரீ கார்த்திகேயன்
அவர்களும் அவர்களது சொந்த அசந்தர்ப்பமான சூழ்நிலையினை பற்றி அறியவும் அதை
தவிர்க்கவும் ஆலோசனை பெற வந்திருந்தார்கள்.
அவர்களுக்கு சில ஆலோசனைகள் மற்றும் பரிகாரப் பூஜைகள் பற்றி
விளக்கம் தந்த பிறகு திருமதி ராணிஸ்ரீ கார்த்திகேயன் அவர்களுக்கு மன அமைதிக்காக லலிதா
சகஸ்ரநாம (நாமாவளி) பூஜையை சொல்லி தந்தேன்.அதனுடன் செல்வ வரவுக்காக லக்ஷ்மி
அஷ்டோத்திர நாமாவளியையும் தந்தேன். இருவரும் நான் சொன்னதை மிக்க தெளிவுடன்
கேட்டறிந்து சென்றனர்.
2015, ஜூலை 3-ந் தேதி வெள்ளிக்கிழமை மாலையில் நான் சொன்னதுப் போல் திருமதி
ராணிஸ்ரீ கார்த்திகேயன் அவர்கள் லலிதா சகஸ்ரநாம நாமாவளி,லக்ஷ்மி அஷ்டோத்திர
நாமாவளியையும் குங்கும அர்ச்சனையாக செய்தார்.
பூஜை முடிந்து குங்குமத்தை எடுத்து வைக்க பார்த்த பொழுது அன்னை
லலிதாவின் படத்தில் அர்ச்சனை செய்த குங்குமத்தில் காட்சியளித்தாள். இதோ அந்த படம்
...
பண்டாசுரனை சம்ஹாரம் செய்ய அதிவிதமானசக்தியுடன் ஏழுவிதமான தேவ சக்தியை தோற்றுவித்தாள். அவர்களே சப்தகன்னிகைகள் எனும்
சப்த மாதர்களான ப்ராம்மி,
மகேஸ்வரி,
கவுமாரி,
வைஷ்ணவி,
வராஹி,
இந்திராணி,
சாமுண்டி
முதலானவர்கள். இதில் ஸ்ரீ வராஹி மாதாவே அன்னை லலிதாவின் படை தலைவியாவாள். அவளும் இந்த அர்ச்சனை செய்த
குங்குமத்தில் காட்சியளிகிறாள். (படத்தை Zoom செய்து பாருங்கள்)
“எதனையும் எதிர்பார்த்தலின்றி தூயோனாய், திறமுடையோனாய், பற்றுதலற்றவனாய், கவலை நீங்கியவனாய் எல்லா ஆடம்பரங்களையுந் துறந்து என்னிடம் பக்தி செய்வோனே எனக்கினியவன், அவன் என்னை எதிலும் காண்பான்.”பகவத்கீதை - அத்தியாயம் 12,பக்தி யோகம், 16வது ஸ்லோகம்
![]() |
ஸ்ரீ வராஹி |

9 கருத்துரைகள்:
Saksath varahi there (I can see once I zoom),no doubt
-Anand
What a wonder
ஆம் அன்னை காட்சி தருகிறாள்.
அத்தனையும் விசித்திரம் தான்.
நன்றி ஐயா பதிவிற்கு
இறையருள் துணை நிற்கும்போது வாழ்வில் இன்பமே.
@Sankaranarayanan C S S Thank you sir
@Dr B Jambulingam நிச்சயம் ஐயா
@Dr B Jambulingam நிச்சயம் ஐயா
@kovaikkavi எளிமையான பூஜைக்கு அரிதான காட்சி நன்றி உங்கள் வருகைக்கு
Post a Comment