
நாட்டில்
பல திருமணங்கள் கோடி கணக்கில் செலவழித்து நடத்தப்பட்டாலும் அண்மையில் நடந்த திருமணங்களில் கேரளத்தில் ரவி பிள்ளை தனது மகள் திருமணத்தை ரூ. 55
கோடியில் நடத்திய திருமணம் அனைவரையும்
ஈர்த்தது.
திரு.ரவி
பிள்ளை கேரளத்தில் கொல்லம் அருகேயுள்ள சாவாரா என்ற கிராமத்தில் சாதாரண விவசாயிக்கு மகனாக பிறந்த இவர்,
அங்குள்ள கல்லூரி ஒன்றில் டிகிரி
படித்தார். பின்னர் கொச்சியில் எம்.பி.ஏ படிப்பு.சேமிப்பில் அக்கறை கொண்ட கேரள மக்களை பார்த்து முதலில் சீட்டு
தொழிலில்தான் ரவி பிள்ளை இறங்கினார். தொடர்ந்து கான்டிரக்ட் தொழில், கட்டுமானத் தொழிலில் கால் பதித்த ரவி பிள்ளை, திருவாங்கூர் பெர்டிலைசர், ஹிந்துஸ்தான் நியூஸ் பிரிண்ட் மற்றும் கொச்சின் ரிஃபெரனைரிஸ்
நிறுவங்களுக்காக சில பணிகளை மேற்கொண்டார்.
திருமண மேடை
எனினும்
தொழிலாளர் பிரச்னை காரணமாக இந்த தொழில்களை...