தமிழகத்தில் தற்போது பெய்த வடக்கிழக்குபருவமழையில்
தத்தளித்து வருகிறது. இந்த மழைகாலங்களில் சென்னையில் வெள்ளம் வீட்டிற்குள் வருவது ஆற்றங் கரையோரம் வசிக்கும்
மக்களுக்கு அன்றாட
நிகழ்வுதான். கூவம் ஆறு, அடையாறு
பகுதிகளிலும், ஆற்றங்கரையோரம்
வசிக்கும் மக்கள் ஆண்டு தோறும்
அனுபவிக்கும் சிரமம்தான். ஆனால் தென்சென்னை வாசிகள் இந்த அளவிற்கு சிரமத்தினை சந்தித்திருக்க வாய்ப்பு இல்லை.
இந்த ஆண்டு புயல் கூட இல்லை காற்றழுத்த தாழ்வு நிலைக்கே புறநகரில் கட்டப்பட்டிருந்த
வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. அண்ணாசாலை முதல் பல முக்கிய சாலைகளையும் வெள்ளநீர்
மூழ்கடித்தது. பல சாலைகள் குண்டும் குழியுமாக மாறியது.மற்றும் சென்னையின் புறநகரில் பல இடங்கள் வெள்ளத்தால்
சூழப்பட்டு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
ஒருபுறம் ஆட்சியாளர்கள் போர்கால அடிப்படையில்
ஏற்பாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக்கொண்டு இருக்கிறோம் என்று தன்
அரசின் செயல்பாட்டை விவரித்தும் எதிர்க்
கட்சியினர் ஆட்சியாளர்களின் மெத்தன போக்கினால் பாதிப்பும் ,எந்த துரித
நடவடிக்கையும் எடுக்க வில்லை என்று குற்றமும் சாட்டி வருகின்றன.
ஆனால் சென்னை நகரின் இதயப் பகுதியான மயிலாப்பூர் தற்போது பெய்த மழையில் எந்த பாதிப்பிலும் சிக்காமல் சும்மா ஜம்
என்று இருக்கின்றன.
சாலைகள் பளிச் என்று கழுவி விட்டது போல புத்தம் புதிதாய் ஜொலிக்கின்றன. மயிலாப்பூரில் பெரும்பாலான பகுதிகளில் மழை
வெள்ளம் தேங்கியதற்கான அறிகுறியே தென்படவில்லை.
அதேநேரத்தில் சிவாஜி சிலையில் இருந்து தொடங்கும் ராதாகிருஷ்ணன் சாலை சுத்தமாக காணப்பட்டது. மழை பெய்த அறிகுறியே தென்படவில்லை. மரத்தில் இருந்து ஒரு இலை உதிர்ந்த தடம் கூட தென்படவில்லை.
![]() |
சென்னை டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை (மழை அன்று) |
இதற்கு காரணம் திட்டமிட்டு அமைக்கப்பட்டு சாலைகள்தான். எவ்வளவு பெரிய மழை பெய்தாலும் வெள்ளநீர் சில மணிநேரங்கள் மட்டுமே தங்கியிருக்கும் பின்னர் வழிந்தோடி விடும். அந்த அளவிற்கு சாலைகளில் வடிகால் வசதிகளும் அமைக்கப்பட்டுள்ளன.
நகரம் கிராமம் என்று எந்த பகுதியாக இருந்தாலும் ஆட்சியாளர்களின் தொலை நோக்கு அமைப்பு திட்டங்கள், திட்டமிட்டு அமைக்கப்படும் சாலைகள், சாலை நீர் வடிகால் அமைப்புகள்,கழிவுநீர் அகற்றும் அமைப்புகள் மற்றும் மக்களின் ஒத்துழைப்பு எனும் காரணிகள் எந்த கடும் மழையையும் வெள்ளத்தினையும் தாங்கிக்கொள்ளும் என்பது தற்போதும் எப்பொழுதும் உணர்த்தும் பாடமாகும்.
இதை ஆட்சியாளர்களும்,எதிர்க் கட்சியினரும் மக்களும் மயிலாப்பூர் பகுதியினை பார்த்து உணர வேண்டுமே
தவிர மழையையும் அரசியல் ஆக்கக் கூடாது

4 கருத்துரைகள்:
மழையை அரசியல் ஆக்கக் கூடாது
உரியவர்கள் உணரவேண்டும் ஐயா
நல்ல செய்தி
உண்மைதான்! திட்டமிட்டு வடிகால் வசதியுடன் குடியிருப்புக்களும் சாலைகளும் அமைய வேண்டும்! அமையாது போனதால்தான் பாதிப்பே!
இன்று அனைத்துமே அரசியலாக மாறிவிட்டது
இவர் வந்தார் அவர் குறை சொல்வதும்
அவர் வந்தால் இவர் குறை சொல்வதும்
நாமெல்லாம் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டியதுதான்
இங்கு எதுவும் அரசியல்.
Post a Comment