உருவ வழிபாட்டையெல்லாம் கடந்து ஞானிகள் இறுதி நிலையை அடைவது அருட்பெரும் ஜோதி வழிபாடு. அதனால், ஜோதி வழிபாடான இந்த கார்த்திகை தீபம் என்பது எல்லா வகையிலும் சிறப்பானது.
இறைவன் ஏகனாய் இருந்து எங்கும் அநேகனாய் ஒளிரும் தத்துவம் ஒளி வழிபாடு அதுவே தீப வழிபாடு.
நாடி நரம்புகள் சம ஓட்டத்தில் இருக்கும் போது தியானம் செய்யாதவர்களுக்கு ஞானம் சித்தியாகும்.
அப்பொழுது இறைவன் ஒளிப்பிழம்பாக வெளிப்படுகிறான். கார்த்திகை
மாதத்தில்தான் நம்முடைய உடம்பில் உள்ள நாடி, நரம்புகளெல்லாம் சம
ஓட்டத்தில் இருக்கும். எனவே இந்த மாதத்தில் முழுநிலவும் கார்த்திகை விண்மீன்களும்
சேரும் நாளில் நெருப்பு ஸ்தலமான திருவண்ணாமலையில் ஏற்றப்படும் தீபம் எங்கும் ஒளி
வெள்ளமும் ஞானமுமாய் நிறைந்திட வழிக்காட்டுகிறது.
பஞ்ச பூத ஷேத்திரங்களுள் (ப்ருதிவி ஷேத்திரம்
காஞ்சிபுரம், ஜலஷேத்திரம் திருவானைக்கா, தேஜஸ் ஷேத்திரம் திருவண்ணாமலை, வாயு ஷேத்திரம் ஸ்ரீ காளஹஸ்தி, ஆகாசசேஷத்திரம், சிதம்பரம்) ஜோதி ஷேத்திரம் திருவண்ணாமலை. ஜோதிஸ் என்றால் வெறும் நெருப்பு மாத்திரம் அல்ல. தீபம் மாத்திரம் அல்ல, தீப ஒளியோடு கூடிய ஞான ஒளி. இப்படிப்பட்ட
ஷேத்திரம் திருவண்ணாமலை.
திருவண்ணாமலை கோவிலில் மலைமேல் தீபம் ஏற்றப்படும்போது எல்லார் வீட்டிலிலும் தீபம்
ஏற்றுவது இத்திருவிழாவின் சிறப்பு.
எங்கும் நிறைந்த இறைவன் எங்கள் வீட்டிலிலும் உறைவான்
அருள் புரிவான் எனும் இறை நம்பிக்கையில் தீப ஒளி விளக்கு ஏற்றுவோம்,அருள்
பெறுவோம்.

2 கருத்துரைகள்:
Nice article on karthigai deepam
-- Anand
மிக நல்ல விளக்கம்.
மிக்:க நன்றி.
https://adakshinamurthy.wordpress.com/deepavaliyum.../
Post a Comment