கொட்டும் மழையில் சென்னை நகரம் அப்படியே
மிதந்து கொண்டுள்ளது. முதல் முறையாக கொட்டித் தீர்த்த மழை முடிந்து சில நாட்கள்
இடைவெளியில் தற்போது மீண்டும் ஒரு வேக மழை சென்னை நகரை நனைத்தெடுத்து வருகிறது.
விடிய விடிய பெய்த மழை போதாமல் தொடர்ந்தும் மழை பெய்து வருவதால் சென்னை நகரில்
இயல்பு வாழ்க்கை முற்றிலும் ஸ்தம்பித்துள்ளது. சென்னையிலும், புறநகரிலும் எங்கு பார்த்தாலும்
வெள்ளக்காடாக உள்ளது. முதல் மழையின்போது தேங்கிய தண்ணீரே இன்னும் வடியாத நிலையில்
அடுத்த மழை வந்து விட்டதால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
சென்னை நகரின் குடிசைப் பகுதிகள் பெரும்
பாதிப்பை சந்தித்துள்ளன. பல குடிசைகள் சேதமடைந்துள்ள நிலையில் தண்ணீரில் குடிசைப்
பகுதிகள் மிதக்கும் நிலையும் காணப்படுகிறது.
![]() |
சாலையில் வெள்ளப்பெருக்கு |
சென்னை வேளச்சேரியில் உதயம் நகருக்குப் பின்புறம் உள்ள குடிசைப் பகுதிகள் வழக்கம் போல நீரில் மூழ்கியுள்ளன. இதனால் அங்கு தெர்மகோல் படகுப் போக்குவரத்தை மக்கள் தொடங்கியுள்ளனர்.
![]() |
வியாபாரம் முடக்கம் |
மழை கொட்டித் தீர்த்து வருவதால் பூச்சிகள் படையெடுப்பு அதிகரித்துள்ளது. அட்டைப் பூச்சிகள் அதிக அளவில் படையெடுத்து வருகின்றன. கூடவே பூரான், நண்டு என பலவிதமான ஜந்துக்கள் உலா வருகின்றன. பாம்புகளும் அவ்வப்போது எட்டிப் பார்த்துச் செல்கின்றன.
![]() |
மரங்கள் சாய்ந்தன |
சென்னைக்கு மழை மிக மிக அவசியம். அதேசமயம், இப்படி அடை மழையாக பெய்தால் ஊர் தாங்காது, மக்கள் தாங்க மாட்டார்கள். எனவே விட்டு விட்டுப் பெய்தால் யாருக்கும் பாதகமில்லாமல் போகுமே. வருண பகவான் இதை கணிவுடன் பரிசீலிக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைக்கும் அளவுக்கு நிலைமை சற்று சிக்கலாகத்தான் உள்ளது.
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் அவர்கள் தப்பியுள்ளனர். ஆனால் அலுவலகம் போவோர்தான் பெரும் அவஸ்தைக்குள்ளாகியுள்ளனர்.
![]() |
சுரங்கப்பாதைகளில் மழை நீர் தேக்கம் |
தமிழகத்தின் தென்
மாவட்டங்களில் கனமழையும் மற்ற மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் மழை அல்லது
இடியுடன் கூடிய மழையும் பெய்யக்கூடும் என்றார். வங்கக்கடலில் உருவான காற்றழுத்த
தாழ்வு மண்டலம் தீவிரமடைந்து, கடந்த
9ம் தேதி புதுச்சேரியில் கரையைக்
கடந்தது. இதனால் தமிழகம் முழுவதும் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக கடலூர்
மாவட்டம் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. இந் நிலையில் இந்த காற்றழுத்தத் தாழுவு
நிலை தமிழக நிலப்பகுதியில் பயணித்து வலுவிழந்து, காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறி, மறைந்து விட்டது. ஆனாலும் கடந்த இரு தினங்களாக தமிழகத்தின்
உள்மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களி்ன் மழை பெய்து வருகிறது.
இந்த மழையால் தமிழக அணைகளும் நிரம்பி
வருகின்றன. இந்நிலையில், கேரளாவை
ஒட்டிய கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது. இதன் காரணமாக
அடுத்த இரு தினங்களுக்கு ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, தேனி உள்ளிட்ட தென் மாவட்டங்களில்
கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், வட மாவட்டங்களில் ஒரு சில
இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என்றும் சென்னை வானிலை
ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், 15ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் பரவலாக கனமழை பெய்யும் என்றும்
வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம்
28ம் தேதி தொடங்கியது. இந்த
பருவமழை காலத்தில் தமிழகத்துக்கு சராசரியாக 44 செமீ மழை கிடைக்கும். நேற்று வரை 30 செ.மீ மழை கிடைத்துள்ளது. சென்னையில் 47 செ.மீ,
கடலூரில் 50 செ.மீ, காஞ்சிபுரத்தில் 50 செ.மீ, தர்மபுரியில் 31 செ.மீ, நெல்லையில் 45 செ.மீ, திருவள்ளூரில் 46 செ.மீ மழையும் பெய்துள்ளது. ஆனால்
விருதுநகர், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, திண்டுக்கல் ஆகிய தென் மாவட்டங்களில்
போதுமான அளவு மழை பெய்யவில்லை.
![]() |
மழையில் அலுவகம் செல்லுதல் |
நன்றி : தினந்தந்தி,தினமலர்,தினகரன் இதழ்கள் மற்றும் செல்போன்.

3 கருத்துரைகள்:
அனுதாபப்படுகிறேன். வேறென்ன செய்ய முடியும்?
மழையின் வேதனை தொடர்கதையாகிக் கொண்டே செல்கிறது
வடிகால் வசதி இல்லை,
என்றுதான் குறைகளைக் களையப் போகிறோமோ
கொட்டும் மழைத் துன்பம் மடிவதற்குள் நேற்று பிரான்சில் குண்டுத் தாக்குதல் ஐயா
இயற்கை செயற்கையாக.. பல பல...
தங்கள் பதிவு விவரம் நல்ல (துன்பத்) தகவல்
Post a Comment