எப்போது மனித முயற்சிகள் தோற்றுப்போய் , ஏதாவது வழி கிடைக்காதா எனும் ஏங்கும்போது, இறைவனின் திருவடிகளை தவிர இளைப்பாற வேறு இடமே இல்லை. இதை ஒவ்வொருவரும் நம் வாழ்வில் எதோ ஒரு தருணத்தில் நிச்சயமாக உணர்ந்தே இருப்பர்.நாம் செய்த கர்ம வினைகளுக்கேற்ப நமக்கு துன்பங்களும், துயரங்களும் நம் வாழ்வில் தொடரும். ஆனால், தீவிர இறைவழிபாடு , அந்த கர்மங்களின் தாக்கத்தை பெருமளவில் குறைத்து , கஷ்டங்களை தாங்கும் சக்தியை நமக்கு கொடுக்கும். சிக்கல்கள் தீர்ந்தவுடன் , திரும்பவும் நம் மனம் முருங்கை மரமேறி விடுகிறது. ஏழரை, அஷ்டம சனி இருப்பவர்கள் மட்டும் , அந்த சூட்டை உணர்ந்து தங்கள் வாலை சுருட்டி கொண்டு , ஒழுங்கான பிள்ளைகளாய் கடவுளை பற்றிக்கொண்டு இருக்கிறார்கள். இறை வழிபாடு - ஹயக்ரீவர் காயத்ரி, துதி, ஸ்ரீ ஹயக்ரீவாஷ்டோத்தரசத நாமாவளி ஹயக்ரீவர். திருமாலின் மிக சக்தி வாய்ந்த மூர்த்தங்களில் முக்கியமானவர்...