மௌனக் கதைகள் -1
பெண்
பெண்
வான்மீகீயூர் L.L.சங்கரின் ‘மௌனக் கதைகள் ‘ தொகுப்பிலிருந்து
சாமியாரும் சீடர்களும் ஆற்றை கடக்க முற்பட்டனர். அப்போது ஒரு பெண் தான் ஆற்றை கடக்க உதவும்படி கேட்டுக்கொண்டாள். உடனே சாமியார் அந்த பெண்ணை தோளில் போட்டுகொண்டு ஆற்றைக்கடந்தார்.
கரை வந்ததும் அப்பெண்ணை இறக்கிவிட்டு சாமியார் நடந்தார். சீடர்கள் சாமியாரை பின் தொடர்ந்தனர்.
ஐந்து கிலோமீட்டர் கடந்து வந்தபிறகு சீடர்கள் சாமியாரிடம், ‘’சாமி…நீங்கள் எப்படி ஒரு பெண்ணைத்தூக்கலாம்…என்று கேட்டார்கள்.
அதற்கு அந்த சாமியார், நான் அந்த பெண்ணை எப்போதோ இறக்கிவிட்டுவிட்டேன். ஆனால் நீங்கள் இன்னமும் அவளை சுமந்து கொண்டிருக்கிறீர்கள்’’என்று சொன்னார்.

0 கருத்துரைகள்:
Post a Comment