ஓணம் திரு நாள் நல் வாழ்த்துக்கள்
இயற்கை என்பது மனிதன் மற்றும் புவிசார் உயிரினங்கள்
அனைத்தின் வாழ்வோடு பின்னி பிணைந்து இருக்கும் வகையில் படைக்கப்பட்டதே. ஆனால், மனிதன் நெருப்பையும், சக்கரத்தையும் கண்டறிந்தபோது
அவனது தேவைகளும் அதிகரித்தன. இதனால் மனித இனம் ஆற்றங்கரையோரம் இடம்பெயர்ந்து
தங்கள் வாழ்வியலையும் அதற்கேற்ப அமைத்துக் கொண்டது. விளைவு, காடுகள் அழிக்கப்பட்டு
விளைநிலங்களாக மாறின. பல நூற்றாண்டு காலம் தொடர்ந்த இந்த மாற்றம் கடந்த மூன்று
நூற்றாண்டுகளாக அதிகரித்தது.இதன் பின்விளைவு இயற்கை சமசீரற்ற நிலை. இதனால்
பூகம்பம், வெள்ளம், சுனாமி, கடல் சீற்றம், நிலச்சரிவு போன்றவை. சமீப
உதாரணம், கேதார்நாத் பேரழிவு. ஒரு காலத்தில் வனாந்திரத்தில்
இமயமலைச்சாரலில் அமைந்த இந்த தலத்துக்கு நடந்தே மக்கள் சென்று வந்தனர். ஆனால் சாலை
வசதி வந்தவுடன் அதை சுற்றியிருந்த வனம் அழிக்கப்பட்டு வாழ்விடங்கள் ஏற்பட்டு
நகரமாக மாறியது. அதன் விளைவே இந்த பேரழிவு.
தமிழகத்தை பொறுத்தவரை தேவைகளுக்காக வனப்பகுதிகளும், ஆற்றுப்படுகைகளும், கனிமவளங்களும், கடல் வளங்களும் சுருங்கிய நிலை
மாறி, சமூகவிரோதிகளின் ஆசைக்கு இரையாகி மாயமாகி வருகின்றன.
பாலாறு, காவிரி, வைகை, தாமிரபரணி ஆறுகளில் நடந்து வரும் மணல் கொள்ளையால் இந்த ஆறுகளின் நிலத்தடி நீராதாரம் கேள்விக்குறியாகி, சாக்கடைகளை தாங்கி நிற்கும் அவலத்துக்கு ஆளாகியுள்ளன. அதேபோல், உலகிலேயே தரமான சந்தன மரங்களுடன் மணம் வீசிய ஜவ்வாது மலைத்தொடர் இன்றைக்கு சமூக விரோதிகளின் அட்டகாசத்தால் விதவை கோலத்தை தாங்கி நின்று கொண்டுள்ளது. இது ஒருபுறம் என்றால் மலைகளையும் நாங்கள் விட்டோமா பார் என்ற ரீதியில் மலை களையும் காணாமல் செய்யும் வேலையை கனகச்சிதமாக செய்து வருகின்றனர் சமூக விரோதிகள்.வனவிலங்குகளின் வேட்டை ஒரு புறம் நடக்க, செம்மரம், வேங்கை, தேக்கு, மருது, குமிழ், வேலம் என்று மதிப்புவாய்ந்த மரங்களையும் வெட்டி கடத்துவது அதிகரித்துள்ளது. சந்தன மரத்துக்கு அடுத்த நிலையில் உள்ளது செம்மரம்.
செம்மரம் இந்தியாவில் மேற்கு வங்கம், ஒடிசா, ஆந்திர மாநிலத்தில் பத்ராசலம், திருப்பதி சேஷாசலம், நல்லமல்லா வனப்பகுதிகளிலும், தமிழகத்தில் காஞ்சிபுரம், வேலூர், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு வனப்பகுதிகளிலும், கர்நாடகத்தில் கோலார், ஷிமோகா, சித்ரதுர்கா, பாகமண்டலா, மைசூர், குடகு மற்றும் மேற்கு தொடர்ச்சி
மலைப்பகுதிகளிலும், கேரளம், மகாராஷ்டிரம் மற்றும் கோவா
மாநிலங்களிலும் நிறைந்துள்ளன.
சமீப காலம் வரை இந்த மரங்களை திரும்பி பார்க்காத சமூக விரோதிகள் வெளிநாடுகளில் இதன் தேவையை அறிந்து சூறையாட தொடங்கியுள்ளனர். இந்த சமூக விரோத செயலுக்கு அப்பாவி மலைவாழ் மக்களை பயன்படுத்திக் கொள்கின்றனர்.
திருப்பதி சேஷாசலம் அடர்ந்த வனப்பகுதியில் மினி மரத்தொழிற் சாலைகளையே இந்த சமூக விரோதிகள்
நடத்தி வருகின்றனர். அதற்கு வேலூர் மாவட்டம் ஜவ்வாதுமலை கிராம மக்களை பக்தர்கள்
போர்வையில் அழைத்து செல்லும் இவர்கள் அங்கு ஒரு டன்னுக்கு 500 முதல் 750 ரூபாய் வரை கூலியாக வழங்கு கின்றனர். இவ்வாறு ஒவ்வொரு வாரமும் ஆந்திர
மாநிலத்தில் இருந்து 500 டன்னுக்கு மேலும், தமிழகத்தில் இருந்து 200 முதல் 300 டன் வரையிலும் செம்மரங்கள்
வெட்டி கடத்தப்படுகின்றன. இதுதொடர்பாக ஆந்திர மற்றும் தமிழக வனத்துறையினர் இணைந்து
கூட்டு நடவடிக்கை எடுத்து வந்தாலும் கடத்தல் என்பது சர்வசாதாரணமாக நடந்து
வருகிறது.
சமீபத்தில் வாலாஜா, ஆற்காடு, ராணிப்பேட்டை, ஒடுகத்தூர் பகுதிகளிலும் வெட்டி
கடத்த முயன்ற பல நூறு டன் செம்மரங்கள் வனத் துறையால் பறிமுதல்
செய்யப்பட்டன. வனவளத்தின் முக்கிய ஆதாரங்களில்
ஒன்றான செம்மரம் உட்பட வனவள கொள்ளைக்கு முக்கிய காரணமாக இருப்பது, இத்துறையில் தற்கால சூழலுக்கு
ஏற்ப அதிகாரிகள் தொடங்கி சாதாரண வாட்சர் வரை பணியாளர் எண்ணிக்கை உயர்த்தப்படாததே
காரணம் என்று வனத்துறை அதிகாரிகளே ஒப்புக் கொள்கின்றனர்.
வனத்துறையினர் பற்றாக்குறை யால் கடத்தல்காரர்களுக்கு கொண்டாட்டமாக இருக்கிறது. பல கோடி ரூபாய்
மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் கண்டும் காணாமல் கடத்தப்படுகின்றன. இதுதொடர்பாக
வனத்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, இப்போதுள்ள பணியாளர்கள்
கட்டமைப்பு நாடு சுதந்திரம் அடைந்தபோது இருந்த கட்டமைப்பாகும். இந்த எண்ணிக்கை
அப்போது எப்படி இருந்ததோ அதே நிலையில்தான் உள்ளது என்று கூறினார். தமிழகத்தில் 22,877 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு
வனப்பகுதி அமைந்துள்ளது. இதன் வனஅடர்த்தி பரப்பு 23,625 சதுர கிலோ மீட்டர். இது மாநில
புவிபரப்பில் 18.16 சதவீதமாகும். தமிழகத்தில் 9 வனவகை பிரிவுகள் உள்ளன. 36 துணை வனவகை பிரிவுகளை கொண்டு
தென்மாநிலங்களில் முதலிடத்தை வகிக்கிறது.
இத்தகைய வனப்பகுதியையும், அதன் செல்வங்களையும் பாதுகாக்க வனத்துறையின் கட்டமைப்பை முழுமையாக மாற்றி அமைப்பது ஒன்றே சிறந்ததாக அமையும். அதோடு வனத்துறைக்கு என சிறப்பு சட்டங்களையும், பாதுகாப்பு அம்சங்களையும் இணைக்க வேண்டும். முழுமையான சுதந்திர அமைப்பாக, பொறுப்பு கூட்டப்பட்ட துறையாக வனத்துறையை மாற்றுவது அவசர அவசியமும், காலத்தின் கட்டாயமும் கூட என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். பல கோடி ரூபாய் கொள்ளையடிக்கும் செம்மர கடத்தல்காரர்களை அடக்கும் சவுக்கு வனத்துறையில் வன அலுவலர்களின் எண்ணிக்கையை உயர்த்துவதிலும், அவர்களது கரங்களில் கட்டப்பட்டுள்ள அதிகார வர்க்கத்தின் கட்டுகளையும் அவிழ்த்து விட்டு அவர்களை சுதந்திரமாக நடவடிக்கை எடுக்க அனுமதிக்க வேண்டும்.
செம்மரத்துல அப்படி என்ன இருக்கு?
மருத்துவ பயன்கள்
செம்மரத்தின் இலை, பட்டை, மரத்தண்டு, பூக்கள் மற்றும் வேர்பாகங்கள்
அனைத்தும் மருத்துவ மற்றும் பொருளியல் பயன்கொண்டவை. இம்மரத்தில் இருந்து
தயாரிக்கப்படும் ஆயுர்வேத மருந்துகளால் குறிப்பிட்ட வகை கேன்சர் குணமாகிறது.
சர்க்கரை நோயை கட்டுப்படுத்துவதுடன், ரத்த அழுத்தம், சிறுநீரக கோளாறுகள், மூலம் மற்றும் வயிறு சம்பந்தமான
வியாதிகள் குணமடைகிறது. அத்துடன் உடலில் சேர்ந்துள்ள கொழுப்பையும் கரைப்பதுடன், தோல் சம்பந்தப்பட்ட நோய்க்கும்
சிறந்த மருந்தாக பயன்படுகிறது. இதன் இலைகளில் இருந்து
எடுக்கப்படும் எண்ணெய் பாக்டீரியா, பூஞ்சாணம் போன்றவற்றுக்கு
எதிராக பயன்படுகிறது.
இதன் மருத்துவ குணத்தை அறிந்தே முன்னோர்கள் குழந்தைகள்
விளையாடும் மரப்பாச்சி பொம்மைகளையும், விளையாட்டு சாதனங்களையும் இந்த
மரத்திலேயே செய்து கொடுத்தனர். இதனால் நோய் எதிர்ப்பு சக்தியுடன், அதீத திறமையுடன் குழந்தைகள்
விளங்கினர். கேரள மாநிலத்தில் 95 சதவீத வீடுகளிலும், ஓட்டல்களிலும் தினமும் குடிநீரை
சுத்திகரிக்க செம்மரக்கட்டை தூளை பயன்படுத்துகின்றனர்.
ஒப்பனை பொருட்களில் செம்மரம்
இதன் பூ, இலைகள் ஒப்பனை அழகுசாதன
பொருட்களாகிறது. இயற்கையான நிறமேற்று பொருளுக்கான அதிஅற்புத உற்பத்தி பொருளாகும்.
ஆயிரம் மடங்கு எதிர்கால தேவையை பூர்த்தி செய்ய வல்லது. இதன் மையத்தண்டில்
அமைந்துள்ள பிரேசிலின் என்ற சிகப்பு சாயம், காற்றில் உள்ள ஆக்சிஜனுடன்
சேரும்போது பிரேசிலியன் வண்ணமாக மாறுகிறது. அரச மரத்துக்கு அடுத்த நிலையில்
காற்றில் உள்ள கார்பன் டை ஆக்சைடை அதிகளவில் உட்கொண்டு அதைவிட அதிகளவில் ஆக்சிஜனை
வெளிவிட்டு சுற்றுச்சூழல் சமநிலைக்கும், மழைக்கும் உதவுகிறது.
19ம் நூற்றாண்டில் பிரிட்டனின்
ஆதிக்கத்தில் இருந்த இந்தியாவில் இருந்தும், அதன் ஒரு பகுதியான அந்தமான்
தீவில் இருந்தும் படாக் மரமும், செம்மரமும் இங்கிலாந்து கொண்டு
செல்லப்பட்டு பர்மிங்ஹாம் அரண்மனை கட்டுமானத்துக்கு பயன்படுத்தப்பட்டது. இன்றளவும்
உறுதியுடன் அந்த அரண்மனை மிளிருகிறது. மருத்துவம், இசைக்கருவிகள் ஆகிய
பயன்பாட்டுக்காக கள்ளத்தனமாக இங்கிருந்து கடத்தப்படும் செம்மரம் ஜப்பானில் டன்
ஒன்றுக்கு ஸி15 லட்சம் வரை விலைபோகிறது. இங்கு டன் ஒன்று ஸி7 லட்சம் ஆகும்.
நன்றி : தினமணி,தினகரன், தி இந்து நாளிதழ்கள்


Myspace Pictures
3 கருத்துரைகள்:
நன்றி .விஷயம் அறிந்தேன் .தெளிவுற்றேன்.
Anand
Nice Article
some modern technology like Electronic ID for each Semmaram can be created to help tracking
and stop smuggling (like ID for cars on tollway)
அருமையான தகவல் வாழ்த்துக்கள்
Post a Comment