டெல்லியில்
வியாழக்கிழமை (05.11.2015) நடைபெற்ற விழாவில் 3 தங்க முதலீடு திட்டங்களை
பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
![]() |
திரு. அருண் ஜெட்லி ,பிரதமர் நரேந்திர மோடி ,திருமதி நிர்மலா சீதாராமன் மற்றும் சிறுமி |
தங்கத்தை
பணமாக்கும் தங்க டெபாசிட் திட்டம். இந்த திட்டத்தின் கீழ் இந்திய குடிமக்கள் யார்
வேண்டுமானாலும் வங்கியில் தங்கத்தை முதலீடு செய்யலாம். ஒரே நேரத்தில்
குறைந்தபட்சம் 30 கிராம்
தங்கத்தை முதலீடு செய்யலாம். இந்த முதலீடு கட்டியாகவோ, நாணயமாகவோ அல்லது நகையாகவோ
இருக்கலாம். அதிகபட்ச முதலீட்டுக்கு உச்சவரம்பு கிடையாது.
ஒரு ஆண்டு
முதல் 3 ஆண்டுகள்
வரையிலான குறுகிய கால டெபாசிட்,
5 முதல்
7 ஆண்டுகள் வரையிலான
நடுத்தர கால டெபாசிட், 12 முதல் 15 ஆண்டுகள் வரையிலான நீண்ட
கால டெபாசிட் என 3 வகையான தங்க
டெபாசிட் திட்டங்களை வங்கிகள் செயல்படுத்தும். இந்த திட்டத்தின் கீழ் முதலீடு
செய்யப்படும் தங்கத்துக்கு அதிகபட்சமாக 2.5 சதவீதம் வரை வட்டி வழங்கப்படும்.
மற்றொன்று
தங்க சேமிப்பு பத்திர திட்டம். இந்த திட்டத்தின்படி, 2 கிராம் முதல் 500 கிராம் வரை தங்க சேமிப்பு பத்திரங்களில் முதலீடு செய்யலாம். இந்த
பத்திரங்கள் வங்கிகளிலும் சில குறிப்பிட்ட தபால் நிலையங்களிலும் கிடைக்கும். இந்த
திட்டத்தில் சேருவதற்கான விண்ணப்பங்கள் வருகிற 20–ந் தேதி வரை பெறப்படும். அதன்பிறகு 26–ந் தேதி தங்க சேமிப்பு
திட்ட பத்திரங்கள் வழங்கப்படும். இந்த சேமிப்பு பத்திர திட்டத்தின் கீழ் 2.75 சதவீத வட்டி வழங்கப்படும்.
இந்த
திட்டத்தில் முதலீடு செய்ய வருமான வரி கணக்கு எண்ணை தெரிவிக்க வேண்டும். இதன்
முதிர்வு காலம் 8 ஆண்டுகள்
ஆகும். அதன்பிறகு, எத்தனை கிராம்
தங்கத்துக்கு பத்திரம் வாங்கி இருக்கிறோமோ அதை தங்கமாகவோ அல்லது பணமாகவோ பெற்றுக்
கொள்ளலாம். பணமாக பெற்றால் அதற்கு வரி உண்டு.
மூன்றாவது
திட்டம் தங்க நாணயம் திட்டம். இந்த திட்டத்தின் கீழ் முதலில் 5 கிராம் மற்றும் 10 கிராம் தங்க நாணயங்களும், பின்னர் 20 கிராம் தங்க கட்டியும்
விற்கப்படும். இந்த நாணயத்தின் ஒரு பக்கம் அசோக சக்கரமும், மற்றொரு பக்கம் மகாத்மா
காந்தியின் உருவமும் பொறிக்கப்பட்டு உள்ளது.
நன்றி: தினந்தந்தி,தினமலர்,நக்கீரன்

1 கருத்துரைகள்:
நன்றி நண்பரே
Post a Comment