வணக்கம்.

எனது வலைப்பூவிற்கு வந்தமைக்கு நன்றி.

அன்பு..எல்லாவற்றையும் வெற்றிக் கொள்ளும்.

அமைதி..எப்பொழுதும் எங்கும் அழகு.

ஆனந்தம்…ஏற்கவும்,சேவை செய்யவும்.

உங்களது கருத்துக்களையும்,விமர்சனங்களையும் அனுப்புங்கள் நன்றி.

-‘ Arrow ’சங்கர்.

Arrow Sankar' Blog

Tuesday, December 20, 2016

குளிர்கால மழைக்கால காய்ச்சலை தவிர்ப்பது எப்படி?

குளிர்காலம் மற்றும் மழைக்காலத்தில் அதிக அளவில் நம்மைத் தாக்குவது காய்ச்சல். இப்போதெல்லாம் காய்ச்சல் வந்தாலே, `என்னது காய்ச்சலா? உஷாரா இருங்க... எல்லா பக்கமும் `டெங்கு’வாம், `சிக்குன்குனியா’வாம்... ஏதோ மர்மக் காய்ச்சலாம்!’ எனக் கலவரத்துடன்தான் காய்ச்சலை எதிர்கொள்கிறோம். மூன்று நாட்களுக்கு மேல் ஜுரம் இருந்தால், மருத்துவர் பரிசோதனைக்கு நீட்டும் பட்டியலில் டைஃபாய்டு, மலேரியா, காமாலை, டெங்கு, சிக்குன்குனியா... என விதவிதமான பரிந்துரைகள்.  காய்ச்சல் ஏன் வருகிறது, மழைக்காலத்தில் அதைத் தவிர்ப்பது எப்படி எனத் தெரிந்துகொள்வோமா? * காய்ச்சல் ஒரு தனி நோய் அல்ல. வெள்ளை அணுக்களைக் கொண்டு, நமது உடல் கிருமிகளுடன் நடத்தும் யுத்தத்தில் கிளம்பும் வெப்பமே காய்ச்சல். வலுவான நோய் எதிர்ப்பு ஆற்றல் இல்லாதபோது ஜுரம் கொஞ்சம் நீடிக்கலாம். புதுவகையான பாக்டீரியா,...

Monday, December 19, 2016

வர்தா புயலால் நாம் கற்றுக்கொண்ட பாடம்!

அண்மையில் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளை ஒட்டுமொத்தமாகப் புரட்டிப்போட்ட 'வர்தா' புயல் தாக்கத்தினால், மரங்கள் வேரோடு சாய்ந்தன. நம்முடைய பாரம்பரிய தாய் மண் கொடுத்த மரங்கள் ஒன்றுகூட விழாமல் வெளிநாட்டு மரங்கள் மட்டுமே விழுந்தன.அவைகளை அகற்ற முடியாமல் குப்பை குளமாய் மாறி சென்னையே அழுக்காய் ஆனது. இது ஒருபுறம் இருந்தாலும் உயிர்பலி சேதாரம் முற்றிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பெரிதும் தவிர்க்கப் பட்டது. 'வர்தா' புயலால் வீதியில் சாய்ந்த மரங்களை முற்றிலுமாக அகற்றும் அளவுக்கு, போதிய பணியாளர்கள் இல்லாத நிலையில், காவல் துறையினருடன் தன்னார்வ தொண்டர்களும் விடிய, விடிய மரங்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். மேலும் அந்தந்தப் பகுதி இளைஞர்களே நேரடியாகக் களத்தில் இறங்கி மரங்களை அகற்றிய...

புற்றுநோயைத் தடுக்கும் 5 சமையல் பொருட்கள் !

புற்றுநோயைத் தடுக்கும் 5 சமையல் பொருட்கள் ! பலமானவரையும் உருக்கிப்போட்டுவிடும் அசுரபலம் கொண்டது புற்றுநோய். வந்த பிறகு அவஸ்தைப்படுவதைவிட, வருமுன் காப்பதே புத்திசாலித்தனம். புகைபிடிப்பது, புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்துவது, உடல் உழைப்பில்லாமல் இருப்பது, ஆரோக்கியமற்ற உணவுகளைச் சாப்பிடுவது, ஊட்டச்சத்துக் குறைபாடு, மனஅழுத்தம், மனச்சோர்வு, காஸ்மெட்டிக் பொருட்களை அதிகம் உபயோகிப்பது, பிளாஸ்டிக் பயன்பாடு... எனப் புற்றுநோய்க்கான காரணிகள் ஏராளம். இவற்றைத் தவிர்ப்பது ஒருபுறம் இருக்கட்டும். இயற்கையாகவே புற்றுநோயை எதிர்த்துப் போராடும் சக்திகொண்ட சில சமையல் பொருட்களும் மூலிகைகளும் இருக்கின்றன. அவற்றை நம் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தினாலே போதும்; புற்றுநோயை அண்டவிடாமல் பார்த்துக்கொள்ளலாம். அவை...              ...

Sunday, December 18, 2016

போர்ப்ஸ் பட்டியலில் இடம் பிடித்த 30 வயது விவேக் ராமசாமி

முப்பது வயதில் எந்த வேலையும் கிடைக்கமாட்டேன் என்கிறது என்பதும், கிடைத்த வேலையில் திருப்தி இல்லாமல் தடுமாறிக்கொண்டிருக்கின்ற இளைஞர்களுக்கு மத்தியில் முப்பதே வயதில் நூறு கோடி ரூபாய்க்குச் சொந்தக்காரராகி இருக்கிறார் விவேக் ராமசாமி. இவருடைய வளர்ச்சி போர்ப்ஸ் பத்திரிக்கையில் இளம் தொழில்முனைவோர் பட்டியலில் இடம்பிடிக்க வைத்து இருக்கிறது.  இவர் அமெரிக்காவில் ரொய்வன்ட் சயின்ஸ் என்று நிறுவனத்தை தொடங்கி அதில் தலைமை பொறுப்பில் இருக்கிறார். இவரது நிறுவனம் நியூயார்க் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டு இருக்கிறது. இவரது நிறுவன பெயரை கேட்டாலேயே பெரிய மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கு கிலியும், சிறிய பயோடெக்னாலஜி, பார்மா நிறுவனங்களுக்கு மகிழ்ச்சியும் தருகிறது. இதற்குக் காரணம், 'பல மருந்துகளைக் கால ஓட்டத்தில் மறந்து விட்டோம் அல்லது அந்த மருந்துகளைத்...

Pages 91234 »
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms