சென்னைக்கு மிகமிக அருகில்
வர்தா புயல் கரையை கடக்கும் என்பதால் முன்னெச்சரிக்கையுடன் இருக்க பொதுமக்களுக்கு
தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
வர்தா புயலால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட வட
மாவட்டங்களில் கனமழை பெய்யலாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால்
பொதுமக்கள் போதுமான குடிநீரை வைத்திருக்கவும், ரொட்டி, பழங்கள், பிஸ்கட்
போன்ற உணவுப் பொருட்களை தேவையான அளவு கையிருப்பில் வைக்கவும் அறிவுறுத்தியுள்ளது.
தாழ்வான பகுதியில் வசிக்கும்
மக்கள் மேடான பகுதிக்கு செல்லுமாறு கூறப்பட்டுள்ளது. ஏரி, குளம், ஆற்றுப் பகுதிகளில்
வசிப்பவர்கள் பாதுகாப்பாக இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது. புயல் காற்றில்
ஜன்னல்கள் உடைய வாய்ப்புள்ளதால் அவற்றை இருக்கமாக மூடி வைக்க
அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வானிலை நிலவரங்களை தொலைக்காட்சி
மற்றும் ரேடியோவை கவனித்து தெரிந்துகொள்ளுமாறும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
மின்கம்பிகள் அறுந்துவிழ வாய்ப்புகள் இருப்பதால், நடந்து செல்வோர் கவனமுடன் செல்லவும்
அறிவுறுத்தப்பட்டுள்ளது.
1.ரேடியா மற்றும் தொலைகாட்சியை
தொடர்ந்து கவனித்து கால நிலை அறிவிப்புகளை அறிந்து கொள்ளவும். இச்செய்தியை
பிறருக்கும் தெரிவிக்கவும்.
2.ரேடியோ மற்றும்
தொலைகாட்சியில் பெறப்படும் அதிகாரபூர்வமான செய்தியை மட்டுமே பிறருக்கு
தெரிவிக்கவும்.
3.புயல்காற்று கதவு மற்றும் ஜன்னல்களை
சேதப்படுத்த வாய்ப்புள்ளதால் அவற்றை இறுக்கமாக மூடி வைக்கவும்.
4.கடற்கரை மற்றும் நீர்சூழ
வாய்ப்புள்ள பகுதிகளில் இருந்தால், மேடானபகுதிக்கு விரைவாக வெளியேறவும். நீர் சூழ்வதற்கு
முன்னரே பாதுகாப்பான பகுதிக்குசென்று விடவும்.
5. தங்கள் குடியிருப்பு வெள்ளம்
மற்றும் புயலால் பாதிக்கபடாது எனில் வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்கவும். எனினும், அதிகாரபூர்வமாக கேட்டுக்
கொள்ளப்பட்டால் உடன் வெளியேறவும்.
6.நீர்நிலைகள் மற்றும் ஆற்று
கரைகளிலுள்ள குடியிருப்புகளுக்குள் கனமழை காரணமாக நீர் சூழ வாய்ப்புள்ளதால்
கரையோரங்களில் குடியிருப்போர் கவனமாக இருக்கவும்.
7.சமைக்காமல் உண்ணக்கூடிய
உணவுகள் (பிரட், பிஸ்கட், பழங்கள்) தேவையான அளவு
இருப்பு வைக்கவும். போதுமான குடிநீரை பாதுகாப்பான பாத்திரங்களில் சேமித்து
வைக்கவும். இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.
Email :sanakrarrow@gmail.com 
0 கருத்துரைகள்:
Post a Comment