Wednesday, August 28, 2013

விருதுக்குப் பெருமை சேர்த்த பெண் வட்டாட்சியர்!


தமிழக அரசின் கல்பனா சாவ்லா விருது பெற்ற வட்டாட்சியர் சுகிபிரமிளா, தனக்குக் கிடைத்த பரிசுத் தொகையை தனது நடவடிக்கைகளுக்குத் துணை புரிந்த ஊழியர்கள் இருவருக்கு வழங்கி அந்த விருதுக்கே பெருமை சேர்த்துள்ளார்.
குமரி மாவட்ட உணவுக் கடத்தல் தடுப்புப் பிரிவு பறக்கும் படை வட்டாட்சியராகப் பணிபுரிந்து வருபவர் சுகிபிரமிளா. இவர் விளவங்கோடு வட்ட வழங்கல் அலுவலராக சுமார் 15 மாதம் பணிபுரிந்தார். அப்போது கேரளத்துக்கு கடத்த முயன்ற 107 டன் ரேஷன் அரிசி, 20 ஆயிரம் லிட்டர் மண்ணெண்ணெய் மற்றும் 1500 கிலோ வெடிபொருள்கள் ஆகியவற்றை அதிரடியாகப் பறிமுதல் செய்தார்.
இவரது துணிச்சலான நடவடிக்கைகளைப் பாராட்டி இவருக்கு கல்பனா சாவ்லா விருது அறிவிக்கப்பட்டது. சென்னையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், வட்டாட்சியர் சுகிபிரமிளாவுக்கு விருதுடன் ரூ.5 லட்சம் ரொக்கப் பரிசை முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.
இந்நிலையில், தனக்கு கிடைத்த பரிசுத் தொகையிலிருந்து தலா ரூ.1 லட்சத்தை தனது நடவடிக்கைகளுக்கு உறுதுணையாகச் செயல்பட்ட வருவாய் ஆய்வாளர் ஜோதிஸ்குமார், ஜீப் ஒட்டுநர் ஜான்பிரைட் ஆகியோருக்கு வட்டாட்சியர் சுகிபிரமிளா செவ்வாய்க்கிழமை வழங்கினார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, கடத்தல் சம்பவங்கள் பெரும்பாலும் அதிகாலை வேளையில்தான் நடைபெறும். வருவாய் ஆய்வாளர் ஜோதிஸ்குமார், ஓட்டுநர் ஜான்பிரைட் ஆகியோரை எந்த நேரம் அழைத்தாலும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கடத்தலை தடுக்க துணிச்சலோடு உதவி புரிந்து வருகின்றனர். எனவே, நான் பெற்ற பரிசுத் தொகையை அவர்களுக்கு பகிர்ந்து அளிப்பதில் மிக்க மகிழச்சியடைகிறேன் என்றார் அவர்.
நன்றி : தினமணி நாளிதழ்

நல்ல யோசனை தோன்றும்போது அதை உடனே செய்து முடியுங்கள்; வெற்றி உங்கள் பக்கம்!                 - ஸ்டோன்

6 கருத்துரைகள்:

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

சிறந்த தலைமைப் பண்புக்கு அடையாளம். அவருக்கு வாழ்த்துக்கள்
நல்ல பகிர்வுக்கு நன்றி

Anonymous said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

Our best wishes to Sukipremila, Jothiskumar and Jhonbright for their brave action. "புலியை முரத்தால் அடித்து விரட்டியவர்கள் தானே நம் நாட்டவர்கள்". Cardial thanks to Arrow Shanker Sir's Blog for sharing this message. Thanks to "Thinamani" as well for publishing this news.

SK

Unknown said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

நன்றி, உங்கள் வருகைக்கு.

Unknown said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

தேங்க்ஸ், சந்தோஷ்.

G.M Balasubramaniam said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates


கிடைக்கும் பெருமைக்கு உரிமை கொண்டாடுவதும், செய்யும் தவறுக்குப் பழி சுமதுவதுமான அதிகார வர்க்கத்தில் திருமதி.சுகி பிரமிளா
பாராட்டுக்கு உரியவர். பகிர்வுக்கு நன்றி.

திண்டுக்கல் தனபாலன் said... Best Blogger Tips[Reply to comment]Best Blogger Templates

மிகவும் போற்றப்பட வேண்டியவர்...

பகிர்வுக்கு நன்றி....

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms