நாட்டில் ரூபாய் நோட்டுக்களை மாற்ற மக்கள் ஆளாய் பறந்து கொண்டிருக்கையில் ஒரே ஒரு கிராமம் மட்டும் எதற்கும் அலட்டிக் கொள்ளாமல் அமைதியாக இருக்கிறது. இந்த கிராமத்தில் 24
மணி நேரமும் வைஃபை இருக்கிறது. எதற்கும் காசை நீட்டுவதில்லை. ஒரே ஒரு தனியார் வங்கியும், ஒரு ஏடிஎம் மும் இருக்கின்றன. அந்த மளிகைக் கடைக்கு 10 ரூபாய் கொடுக்க வேண்டும் என்று எஸ்எம்எஸ் செய்தால் போதும், அடுத்த வினாடி மளிகைக்கடைக்காரர் அக்கவுண்டில் 10
ரூபாய் ஏறி விடுகிறது.
கிராமத்தில் 24 மணி நேரம் இலவச வைஃபை இருக்கிறது. சுவாரஸ்யம் என்னவென்றால் இங்கு இருக்கும் பலருக்கும் ஸ்மார்ட் போன் பயன்படுத்துவதில்லை.
அதனால், வைஃபை பற்றியெல்லாம் கவலைப்படுவதில்லை. ஆனால்,சிறியது முதல் பெரிசு வரைத் தெளிவாக எஸ்.எம்.எஸ்.கள் அனுப்ப மட்டும் தெரிந்து வைத்திருக்கிறார்கள்
இந்த கிராமத்தில் ஒரே ஒரு ஏடிஎம் உள்ளது. நாட்டில் உள்ள ஒவ்வொரு ஏடிஎம்மிலும் பணம் எடுக்க கால் கடுக்க மக்கள் காத்திருக்கின்றனர்.
ஆனால், ஏடிஎம்முக்கு சற்றும் மரியாதை கொடுக்காத கிராமம் இதுவாகத்தான் இருக்கும். இந்த கிராமத்தில் இருக்கும் ஒரே ஒரு ஏடிஎம் மையமும் காலியாகத்தான் காணப்படுகிறது. கிராமத்தைப் பற்றி தெரிந்து வைத்திருக்கும் பக்கத்து கிராம இளைஞர்கள்தான் இங்கு வந்து பணம் எடுத்துப் போகிறார்கள்.
அகோதரா கிராமத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் மோகன்பாய். டிஜிட்டல் கிராமமாக மாறுவதற்கு முன் பக்கத்து ஊருக்கு போய் பென்சன் பணம் எடுப்பார். இருமுறை பிக்பாக்கெட்டுகளுக்கு பணத்தை பறிகொடுத்திருக்கிறார். இப்போது பிக்பாக்கெட்டுகளைப் பற்றி கவலைப்படுவதில்லை. அவரது ஆன்லைனிலேயே பென்சன் பணம் டெபாசிட் ஆகி விடுகிறது. கடைகளுக்கு கூட பணம் எடுத்துக் கொண்டு போக வேண்டிய அவசியம் இல்லை. அதனால், பிக்பாக்கெட்டுகளும் இந்த கிராமம் பக்கமே தலை வைத்து படுப்பதில்லை. அங்க போனா ஒன்னும் கிடைக்காதுனு அவர்களுக்கும் தெரிந்து விட்டது.
இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் பியூஸ் பட்டேல். சிறிய மாட்டுப்பண்ணை வைத்து நடத்தி வருகிறார். இவர் தனது கஸ்டமர்களிடம் இருந்தும் ஆன்லைனில்தான் பணம் பெறுகிறார். ''கடையில் 10 ரூபாய்க்கு பொருள் வாங்கினால் கூட கடைக்காரர் அக்கவுண்டை எஸ்எம்எஸ் செய்தால், அவருக்கு ஆன்லைனில் பணம் செலுத்தப்பட்டு விடும் ''என்கிறார்.
மளிகைக் கடை நடத்தும் பங்கில், ''நாடு முழுவதும் நோட்டுகளை மாற்ற மக்கள் அலைந்து கொண்டிருப்பது குறித்து கேள்விப்படுகிறோம். எங்கள் கிராமத்தில் ஒரு எஸ்எம்எஸ் அனைத்து வேலைகளையும் செய்து விடும். எதற்கும் நாங்கள் கையில் காசை எடுப்பதில்லை'' எனக் கூறுகிறார்.
நவீனத்தை முறையாக பயன்படுத்தி வெற்றி கண்டிருக்கிறது இந்த அகோதரா குட்டி கிராமம்!

1 கருத்துரைகள்:
ஆச்சர்யமாக உள்ளது.
Post a Comment