
2016-17-ம் ஆண்டுக்கான மத்திய பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் அருண்ஜெட்லி மக்களவையில் இன்று (29.02.2016) தாக்கல் செய்தார். அதன் சிறப்பு அம்சங்கள் வருமாறு :
* ஊரக ஏழைக் குடும்பத்திற்கு ரூ.1 லட்சம் காப்பீடு வழங்கும் புதிய சுகாதார திட்டம் செயல்படுத்தப்படும்.
* அனைத்து குடும்பத்திற்கும் ஒரு லட்சம் காப்பீடு வழங்கும் திட்டத்திற்கு ரூ.30 ஆயிரம் கோடி ஒதுக்கீடு.
* இந்தியாவில் தயாரிக்கப்படும் உணவுப் பொருட்களை சந்தைப் படுத்த 100 விழுக்காடு அந்திய நேரடி முதலீடு அனுமதிக்கப்படும்.
* 75 லட்சம் குடும்பங்கள் சமையல் எரிவாயு மானியத்தை கை விட்டுள்ளன.
* உள்ளாட்சித்துறைக்கு ரூ.87,700 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* சாலைப் போக்குவரத்து துறை மற்றும் ரயில்வே துறைக்கு ரூ.2.80 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* 50 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவு...