அனுமந்தப்பா!
அணு அணுவாய்
உன்னை மரணம் தின்ற போதும்
உன் இதயம் மட்டும் துடித்தது
இந்தியாவுக்காய்!
அனுமதி பெற்றே மரணம்
வர வேண்டும் என
பீஷ்மனைப் போல்
வரம் பெற்றிருந்தாய்
எனத் தெரியாமல்
உன்னை கோமாவில்
தள்ளி விட்டு எமன்
கோமாளி போல் நின்றிருந்தானே
எட்டு நாள்கள்!
அனுமந்தப்பா!
அந்த குளிரில்
ஆறு நாட்கள் கல்லீரலும்
சிறுநீரகமும் நுரையீரலும்
மூளையும் வேலை செய்ய
மறுத்த பின்னும்
உயிர் மட்டும் உன்னத வீரன்
உன்னை விட்டு தனியே
செல்ல பயந்து
உன்னைக் கட்டிப்பிடித்து
பிழைத்துக் கொண்டதோ?
உனக்கு நேர்ந்தது
வீர மரணம்
என்று சொன்னாலும்
அது தப்பு!
நீ மரணத்தை
வீரமாக சாக விட்டிருக்கிறாய்!
அனுமந்தப்பா
மரணமும் உன்னிடம்
மனு போட்டு வந்ததப்பா!
தேசத்துக்காக இன்னுயிரை
ஈந்த உன்னை
தேசமே கண்ணீருடன்
வணங்குதப்பா!
உன்னைக் காத்திருந்து
கொன்று விட்டு மரணமும்
உன ஆத்மாவிடம்
மண்டியிட்டு சினுங்குதப்பா!
அனுமந்தப்பா | |
---|---|
அரைமணிநேரம் கரண்ட் இல்லாமல் போனாலே அதிகாரி முதல் அரசாங்கம் வரை அனைத்தையும் சாபம் விட்டு தீர்க்கும் நாம் 6 நாட்கள் உணவின்றி, நீரின்றி 25 அடி ஆழத்தில் 40 டிகிரி உறைகுளிரில் எம் இந்திய மண்ணை பிடித்தபடியே உயிர் நின்ற நம் கதாநாயகனை பார்த்து கற்றுக்கொள்ளவேண்டும்.... | |
வரலாற்றின் பெரிய மாவீரர்களை வரலாற்று புத்தகத்தில் படித்திருக்கிறோம். ஆனால் உன்னுடன் மட்டுமே வாழ்ந்திருக்கிறோம். | |
நன்றி ஐயா... உம் குடும்பத்தை இந்நாடு பாதுகாக்கும். சென்றுவா என் நாயகனே... REST IN PEACE .... |
தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் நினைவிழந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த லான்ஸ் நாயக் ஹனுமந்தப்பா, சிகிச்சை பலனின்றி நினைவு திரும்பாமலேயே இன்று(11.02.2016) உயிரிழந்தார்.
சுமார் 20 அடி ஆழத்தில் பனிச்சரிவில் சிக்கிய 10 வீரர்களில், உயிரோடு
மீட்கப்பட்ட ஒரே ஒரு வீரரான ஹனுமந்தாப்பாவுக்கு தில்லி ராணுவ மருத்துவமனையில்
கடந்த 3 நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டது.
அவருக்கு நிமோனியா பாதிப்பு ஏற்பட்டு, சிறுநீரகமும், கல்லீரலும் செயல்படாமல் இருந்தது.
மருத்துவர்களின் தீவிர முயற்சியும் பலனளிக்கவில்லை. ஏராளமானோர், ஹனுமந்தப்பாவுக்கு சிறுநீரகத்தை தானம்
செய்யவும் முன்வந்தனர்.
ராணுவத்தின் சென்னைப் படைப்பிரிவில்
பணியாற்றி வந்த ஹனுமந்தப்பா கர்நாடகாவைச் சேர்ந்தவர். சொந்த கிராமத்துக்கு அவரது
உடலைக் கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுவதாக மத்திய அரசு
தெரிவித்துள்ளது.
நன்றி : சுப்ரமணி (வாட்ஸ் அப் பகிர்வு)
நன்றி : சுப்ரமணி (வாட்ஸ் அப் பகிர்வு)

3 கருத்துரைகள்:
ராணுவ வீரர் ஹனுமந்தப்பாவின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
ராணுவ வீரர் ஹனுமந்தப்பாவின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
ராணுவ வீரர் ஹனுமந்தப்பாவின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
(வேதாவின் வலை.)
Denmark.
Post a Comment