108 என்பது இந்தியாவில் அவசர கால அழைப்புக்கான கட்டணம் இல்லாத இலவசத் தொலைபேசி எண் ஆகும்.
அவசர கால மருத்துவ உதவிகளுக்கு 108 எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். இந்தச் சேவை எல்லா நாட்களிலும் 24
மணி நேரமும் (24
× 7) செயல்படும். இந்தச் சேவை தமிழ்நாடு,
ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம், கோவா, குஜராத், மத்தியப் பிரதேசம், இராஜஸ்த்தான், உத்தரகாண்ட், அசாம், மேகாலயா ஆகிய இந்திய மாநிலங்களில் செயல்படுகிறது.
அவசர கால உதவிக்கு 108ஐ தொடர்பு கொள்ளும் போது, அழைப்பவரிடம் இருந்து கீழ்கண்ட விபரங்கள் கேட்கப்படுகின்றன.
1.எங்கிருந்துஅழைக்கப்படுகிறது.(மாவட்டம் /நகரம் / ஊர் / கிராமம் /சம்பவ இடத்திற்கானத் துல்லியமான விபரம்)
2.எந்த வகையான அவசர உதவித் தேவைப்படுகிறது.
3.எத்தனை பேர் காயம்பட்டுள்ளனர் அல்லது பாதிக்கப் பட்டுள்ளனர்
4.அழைப்பவரின் பெயர் மற்றும் தொலைபேசி எண் – (தேவைப்பட்டால் சம்பவ இடத்திற்கான வழி கேட்க.)
"ஒவ்வொரு ஆண்டும் சாலை விபத்துகளில் விலை மதிப்பற்ற மனித உயிர் இறப்புகள் ஏற்படுகின்றன. இதனால் பாதிக்கப்படும் குடும்பங்கள், மன உளைச்சலுக்கு ஆளாவதோடு வருமானம் ஈட்டும் நபரை இழந்து பொருளாதார நெருக்கடிக்கும் ஆளாகின்றனர்.
உயிர் இழப்பை தடுக்கவும், விலை மதிப்பற்ற மனித உயிர்களைக் காப்பாற்றவும் தமிழக அரசு, அரசு மருத்துவமனைகளில் விபத்து மற்றும் தலைக்காய சிகிச்சை மையங்களை ஏற்படுத்தி வருவதோடு, ‘108’ அவசரகால ஆம்புலன்ஸ் திட்டத்தில் செயல்பட்டு வரும் ஆம்புலன்ஸ்களின் எண்ணிக்கையை கடந்த 5 ஆண்டுகளில் 385-லிருந்து 755-ஆக உயர்த்தியுள்ளது.
இதுமட்டுமின்றி, 66 பச்சிளம் குழந்தைகளுக்கான சிறப்பு அவசரகால ஊர்திகள், 78 மலையோரங்கள் மற்றும் மணல் பாங்கான பகுதிகளில் இயங்கக்கூடிய சிறிய ரக அவசரகால ஊர்திகள், சென்னை புறநகர் பகுதியில் 2 அவசரகால சிகிச்சை ‘108’ அவசரகால சேவையை மேலும் செம்மைப்படுத்த வேண்டும் என்ற உயரிய நோக்கில், அவசரகால முதலுதவிக்காக 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 41 இருசக்கர வாகனங்களின் சேவையை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக முதலமைச்சர் ஜெயலலிதாவால் இன்று (08.02.2016) துவக்கி வைக்கப்பட்ட அவசரகால முதலுதவிக்கான 41 இருசக்கர வாகனங்களில், 31 இருசக்கர வாகனங்கள் மோட்டார் சைக்கிள் வடிவிலும், 10 இருசக்கர வாகனங்கள் ஸ்கூட்டர் வடிவிலும் அமைக்கப்பட்டுள்ளன. ஆடவர் மட்டுமின்றி, பெண் அவசரகால மருத்துவ உதவியாளரும் இயக்கும் வண்ணம் இவ்வாகனங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இந்தியாவிலேயே முதன் முறையாக பெண் மருத்துவ உதவியாளர்களால் இயக்கப்படும் அவசரகால முதலுதவிக்கான ஸ்கூட்டர் வடிவிலான இருசக்கர வாகனங்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு, முதல் 10 நிமிடங்கள் பிளாட்டினம் நிமிடங்கள் (Platinum 10 minutes)என்று அழைக்கப் படுகிறது. இந்த முதல் 10 நிமிடங்களில் பாதிப்பின் தன்மையை கண்டறிந்து, பாதிக்கப்பட்ட பகுதியை அசையாமல் செய்து (Immobilisation) உயிர் மீட்பு (Resuscitation), உயிர் வாயு வழங்குவது (Oxygen), இரத்தப்போக்கை கட்டுப்படுத்துவது (Bleeding control) போன்ற முதலுதவிகள் பாதிப்பின் தன்மையை குறைத்து, உயிர் காக்கும் வாய்ப்பை அதிகரிக்கும். விபத்து பகுதிகளுக்கு ‘108’ அவசரகால ஊர்திகள் செல்வதற்கு முன்பு, பாதிப்புக் குள்ளானவரு க்கு உடனடியாக தரமான முதலுதவி கிடைக்க இந்த இருசக்கர முதலுதவி வாகனங்கள் வழிவகை செய்யும். இதனால் விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு மருத்துவ உதவி கிடைப்பதற்கான கால அளவு (Reponse Time) மேலும் குறையும்.
இந்த இருசக்கர முதலுதவி வாகனத்தில்,
1.கையில் எடுத்து
செல்லக்கூடிய
உயிர்
வாயு சிலிண்டர் (Portable
oxygen Cylinder),
2.நாடித்துடிப்பை கண்டறியும் கருவி (Pulsoxymeter),
3.இரத்த அழுத்தத்தை அறியும் கருவி (BP apparatus),
4.இரத்தத்தில் சர்க்கரை அளவை அறியும் கருவி (Glucometer),
5.உடல் சூட்டை அறியும் கருவி (Digital Thermometer)
போன்ற உயிர் காக்கும் கருவிகளும் தேவையான மருந்துகளும் வைக்கப்பட்டுள்ளன.
இந்த இருசக்கர வாகனத்தை பயிற்சி பெற்ற அவசரகால மருத்துவ உதவியாளர் ஓட்டுவார். அவசர ஒலி எழுப்பும் ஒலிபெருக்கி தன்மையுடன் கூடிய வண்ணத்தில் இவ்வாகனங்கள் சிறப்புற வடிவமைக்கப்பட்டுள்ளன. அவசரகால அழைப்பு,
‘108’ அவசர கட்டுப்பாடு அறைக்கு வந்தவுடன், பாதிப்பின் தன்மைக்கேற்ப இந்த இருசக்கர வாகனம் அனுப்பி வைக்கப்பட்டு, பாதிப்பின் தன்மையை ஆய்வு செய்து முதலுதவி வழங்கப்படும். பாதிப்பின் தன்மை அதிகமாகவும், மருத்துவமனையில் உடனடி சிகிச்சை பெற வேண்டிய அவசியமும் இருப்பின், ‘108’ அவசரகால ஆம்புலன்ஸ் மூலம் பாதிக்கப்பட்டவர் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்படுவார்.
இந்த அவசரகால இருசக்கர வாகனம், முதல் கட்டமாக சென்னை மாநகரத்தில் முக்கிய சந்திப்புகள், குறுகிய மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் நிறுத்திவைக்கப்பட்டு, பகல் பொழுதில் போக்குவரத்து அதிகம் இருக்கக்கூடிய இடங்களில் இயக்கப்படும்.
இவற்றின் பயன்பாட்டைப் பொறுத்து, இந்தத் திட்டம் மற்ற நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்படும். இந்த சிறப்பு சேவை மூலம், மேலும் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்படும்"
என்று இது தொடர்பாக தமிழக
அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

3 கருத்துரைகள்:
A new news which no one is aware.let this news spread over so that those affected will be benefitted.Thanks for the news.
SANKRANARAYANANCS
@Sankaranarayanan C S Sthanks sir.
அனைத்தும் அறிந்து கொண்டேன் மிக்க நன்றி.
(வெதாவின் வலை.)
Post a Comment