கும்பகோணம்
மகாமகம் குளத்தில் மன்மத வருடம், உத்திராயணம்,
சிசரருது, மாசிமாதம் 10ம்நாள்(22 பிப்ரவரி 2016)
திங்கள் கிழமை, வளர்பிறை பவுர்ணமி(இரவு 11:49 வரை பின்னர் பிரதமை திதி), மகம் நட்சத்திரம்(அதிகாலை 5:27 முதல் மறுநாள் 23.2.2016 செவ்வாய் காலை 7:22 வரை) அதிகண்ட யோகம் இரவுக்கு பின் 1:43 மணி வரை, பத்திரை கரணம் (பகல் 11:09 வரை) அடுத்து பவம் இரவு 11:49 வரை) கூடிய தினத்தில் சூரியன் கும்பத்திலும், பூர்ணசந்திரன் மகம் நட்சத்திரத்திலும், குரு சிம்ம ராசியிலும் நிற்க மகாமகம்
கடைபிடிக்கப்படுகிறது.
அருள்மிகு.
ஆதிகும்பேஸ்வரர் நீராடல் நேரம்:
அன்று கும்பகோணம் ஸ்தல நேரப்படி பகல் 11:18 மணிக்கு மேல் பிற்பகல் 1:20 மணிக்கு முன்னர் ரிஷப லக்னத்தில், ரிஷப வாகனத்தில் மகாமகம் குளத்திற்கு வருகைதந்து புனிதநீராடி பக்தர்களின் பாவங்களை நீக்கி அருள்புரிவார்
அன்று கும்பகோணம் ஸ்தல நேரப்படி பகல் 11:18 மணிக்கு மேல் பிற்பகல் 1:20 மணிக்கு முன்னர் ரிஷப லக்னத்தில், ரிஷப வாகனத்தில் மகாமகம் குளத்திற்கு வருகைதந்து புனிதநீராடி பக்தர்களின் பாவங்களை நீக்கி அருள்புரிவார்
13.2.2016 அன்று
கொடியேற்றத்துடன் தொடங்கிய மாசிமகம் உற்சவம்
10ம் நாள் மகம்
நட்சத்திரத்தில் தீர்த்தவாரி(புனித நீராடல்) நிறைவு பெறும்.
மகாமகம்
வானியல் விளக்கம்
சூரியன்,
பூமி, சந்திரன், குரு கிரகம், மகம்
நட்சத்திரம் ஆகிய ஐந்தும் வானில் நேர்கோட்டில் (±7 பாகை ) வரும் காலமாகும். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறைமட்டும் இதுபோல் வரும். இந்த
காலத்தில் சூரியனுக்கு எதிர்நிலையில் குரு கிரகம் முழுநிலவுபோல்
முழுவிட்டத்துடனும் அதன் சந்திரன்களுடனும் வானில் அழகாக தோன்றும் இதை தொலைநோக்கி(பைனாகுலர்)
மூலம் காணலாம்.
கும்பகோணத்தில் எழுந்தருளியுள்ள
ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் மகாமகம் பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை
திருவிழாவாகவே கொண்டாடப்படுகிறது. இக்குளத்தில் மாசி மாதத்தில் மற்றும் சிறப்பாக மகத்தன்று நீராடினால் யமுனை, சரஸ்வதி, கோதாவரி,
நர்மதா, சிந்து, காவேரி உள்ளிட்ட பன்னிரெண்டு புண்ணிய நதிகளில் மக்கள் நீராடிய
பலன்கிட்டும். மேலும் இப்பிறவியில் பாவச்சுமைகளை
நீக்கவும் தங்களின் புனிதத் தன்மையை பெறவும் ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் வழிபடுதல்
நன்று. வரயிலாதவர்கள் அருகில் இருக்கும் கோவில் குளத்தில் நீராடி கும்பேஸ்வரரை
தியானித்து சிவபுராணம் படித்து வில்வம் சாற்றினால் பலன்கிட்டும். மேலும் அன்று
கும்பகோணம் செல்ல இயலாதவர்கள் மாசிமாதத்தில் ஏதேனும் ஒருநாளில் மகாமகம் குளித்தில்
நீராடல் நன்று
தானம்:
மகாமகம்
அன்று ஏழைகளுக்கு அன்னதானம் செய்தும், முன்னோர்களுக்கு தர்பணம் செய்வதும் மிகவும் புண்ணியமாகும். குறிப்பாக வேதம்
படிக்கும் வேதபாட சாலை மாணவர்களுக்கு அன்னதானம் செய்தல் மிகவும் நற்பலனை தரும்.
மகாமகம்
அன்று சூரிய உதயத்தில் நதி, குளம், ஆறு, கடல் நீராடல் மிகவும்
நன்று. கூடுதலாக நன்பகலில் மகாமகம் வழிபாட்டிற்காக மீண்டும் நீராடல் அவசியமாகும்.

1 கருத்துரைகள்:
விளக்கங்களிற்கு மிக்க நன்றி.
(வேதாவின் வலை)
Post a Comment