கும்பகோணத்தில்
மகாமக பெரு விழா வருகிற 2016–ம் ஆண்டு
பிப்ரவரி 22–ந் தேதி
நடக்கிறது. இந்த விழாவுக்கு இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலிருந்தும் 25 லட்சம் பக்தர்கள்
வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கும்பகோணத்தில் பல கோடி மதிப்பில் பல்வேறு
அடிப்படை வசதிகளை தமிழக அரசு செய்து வருகிறது.
இது குறித்து
இந்து சமய அறநிலையத்துறையின் மயிலாடுதுறை மண்டல இணை ஆணையர் கஜேந்திரன்
செய்தியாளர்களிடம்,
2016–ம் ஆண்டு பிப்ரவரி 13–ந் தேதி மகாமக பெருவிழா
கொடியற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள்
நடக்கிறது. பிப்ரவரி 21–ந் தேதி
தேரோட்டம், 22–ந் தேதி மகாமக
தீர்த்தவாரி நடக்கிறது.
மகாமக
பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கும் நாளிலிருந்து மகாமக குளத்தில் பக்தர்கள்
குளிக்க அனுமதிக்கப்படுவர்.
2004–ம் ஆண்டு நடந்த மகாமகம், 1968–ம் ஆண்டு நடந்த
மகாமகத்தின் போது பக்தர்கள் 10
நாட்கள்
புனித நீராடியதாக சான்றுகள் உள்ளன.
தொன்று தொட்டு
10 நாட்களும் புனித நீராடிய
வைபவத்துக்கு சான்றுகள் உள்ளதால் தற்போது நடைபெற உள்ள மகாமகத்திலும் புனித நீராட
பக்தர்கள் அனுமதிக்கப்படுவர்.
பிப்ரவரி 13–ந் தேதி கொடியேற்றம்
நடந்தவுடன் பக்தர்கள் நீராடலை தமிழகத்தை சேர்ந்த சைவ, வைணவ மடாதிபதிகள் மற்றும்
ஆதீன கர்த்தர்கள் மற்றும் சமய தலைவர்கள் தொடங்கி வைக்கின்றனர்.
விழா தொடங்கிய
நாள் முதல் பிப்ரவரி 22–ந் தேதி
தீர்த்தவாரி முடிய எந்த ஒரு நாட்களில் புனித நீராடினாலும் புண்ணியம் ஏற்படும்
என்பதை பெரியவர்கள் தெரிவித்து உள்ளனர்’’என்று கூறினார்.
கும்பகோணம் மகாமகம் குளத்தில் மன்மத வருடம், உத்திராயணம், சிசரருது, மாசிமாதம் 10ம்நாள்(22 பிப்ரவரி 2016) திங்கள் கிழமை, வளர்பிறை பவுர்ணமி(இரவு 11:49 வரை பின்னர் பிரதமை திதி), மகம் நட்சத்திரம்(அதிகாலை 5:27 முதல் மறுநாள் 23.2.2016 செவ்வாய் காலை 7:22 வரை) அதிகண்ட யோகம் இரவுக்கு பின் 1:43 மணி வரை, பத்திரை கரணம் (பகல் 11:09 வரை) அடுத்து பவம் இரவு 11:49 வரை) கூடிய தினத்தில் சூரியன் கும்பத்திலும், பூர்ணசந்திரன் மகம் நட்சத்திரத்திலும், குரு சிம்ம ராசியிலும் நிற்க மகாமகம் கடைபிடிக்கப்படுகிறது.
|
---|

4 கருத்துரைகள்:
அனைவரும் விழாவில் கலந்துகொள்ளவும், அமைதியாகவும் மன நிறைவாகவும் அனுபவிக்கவும் இவ்வாறான புனிதக்குளியல் வகை செய்யும். பகிர்வுக்கு நன்றி.
மிக நல்ல தகவல்கள் மிக்க மகிழ்ச்சி .
நன்றி.
(வேதாவின் வலை)
@kovaikkaviவாருங்கள் மகாமகத்திற்கு
@Dr B Jambulingam உங்கள் ஆதரவும் வாழ்த்துக்கும் நன்றி சார்
Post a Comment